09
Oct
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரி யாக தமிழக அரசு நியமித்தது. ஆனால், தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து அப்போது தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்த விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் விசாரணையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது. அதன்படி தேர்தலை வரும் டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் நடத்தி முடிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், தேர்தல் நடத்தி முடித்தது தொடர்பான அறிக்கையை 2021 ஜனவரி 30-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதன்படி…