05
Mar
முழுமையாக ஆன் லைன் யுகமாகி விட்ட இந்த கொரோனா காலத்திலும் எல்லா சந்தேகங்களுக்கும் விளக்கம் சொல்லும் கூகுளில் அப்பா-மகள் கதை என்று டைப்-பிட்டு சர்ச் செய்து பாருங்கள்.. அந்த கூகுள் நடத்தும் குடும்பதாரரின் பலான கதைகள்தான் முன்னிலை யில் எட்டிப் பார்க்கும். ரொம்ப காலமாகவே தொடரும் இம்மாதிரியான சூழலில் கோலிவுட்டில் அவ்வப்போது அப்பா + மகள் உறவை, பாசத்தை, நேசத்தை, பிரியத்தை அடிப்படையாகக் கொண்டு நெகிழ வைக்கும் சினிமாக்கள் வருவதுண்டு. அந்தப் பட்டியலில் இணைந்து விட்டது இந்த இருபத்தி ஓராம் நூற்றாண்டின் ‘அன்பிற்கினியாள்’. இதில் விசேஷமாக குறிப்பிடத் தக்கது நிஜ அப்பா – மகளே நிஜமாகவே வாழ்ந்து அசத்தி இருப்பதுதான். நம்மில் பெரும்பாலானோர் போல் மிடில் கிளாஸைச் சேர்ந்தவர். மனைவியை இழந்தவர், அருண் பாண்டியன். இவரது ஒரே மகள் கீர்த்தி பாண்டியன் நர்சிங் கோர்ஸ் முடித்து, அப்பாவின் கடனை அடைக்க கனடா சென்று வேலை பார்க்க முயற்சி செய்து வருகிறார். கூடவே…