மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளூக்காக ராகவா லாரன்ஸ் செய்த மனிதம்!

மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளூக்காக ராகவா லாரன்ஸ் செய்த மனிதம்!

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர் மாஸ்டர் ராகவா லாரன்ஸ், திரையுலக ஹீரோ என்பதை விட, அவர் நிஜ வாழ்வில் செய்து வரும் உதவிகள், அவரை ஒரு மிகப்பெரும் நட்சத்திரமாக மக்கள் மனதில் நிலை நிறுத்தி வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக அவர் செய்து வரும் உதவிகளுக்கு பலனாக, இன்று அடுத்த தலைமுறை எழுந்து நிற்கிறது. தமிழர்களின் பாரம்பரிய மல்லர் கம்பம் சாகச கலை நிகழ்வு, இதுவரையிலும் உடல் வலு கொண்டவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இருந்தது. தற்போது ராகவா லாரன்ஸ் “கை கொடுக்கும் கை” மாற்றுத்திறனாளிகள் குழு சார்பில், மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்ற மல்லர் கம்பம் சாகச நிகழ்வு, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாஸ்டர் ராகவா லாரன்ஸ் பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்வினில் குழு ஒருங்கிணைப்பாளர் …. நீங்கள் கொடுக்கும் கைதட்டல், தன்னம்பிக்கை எல்லாவற்றிருக்கும் காரணமான ராகவா லாரன்ஸ் மாஸ்டருக்கு இந்நேரத்தில்…
Read More
வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் ‘சபரி’ !

வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் ‘சபரி’ !

இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த 'சபரி' திரைப்படம் மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராக உள்ளது. இந்தப் பல மொழித் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர். எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக வரலட்சுமி சரத்குமார்…
Read More
“ஆலன்” படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் வெற்றி!

“ஆலன்” படத்தின் படப்பிடிப்பில் கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார் நடிகர் வெற்றி!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் முன்னணி நடிகர் வெற்றி. வித்தியாசமான படங்களால் ரசிகர்களை மகிழ்வித்து வரும், நடிகர் வெற்றியின் பிறந்தநாளை, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் “ஆலன்” திரைப்படக்குழுவினர். திரையுலகில் அறிமுகமான எட்டு தோட்டாக்கள், ஜீவி என முதல் இரண்டு படங்களிலேயே, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் வெற்றி. வித்தியாசமான களங்களில் ரசனை மிகு படங்களை தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு படங்களிலும் தன்னை மெருகேற்றிக்கொள்வதோடு, ரசிகர்களுக்கும் விருந்து படைத்து வருகிறார் வெற்றி.தற்போது 3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவான ஆலன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இன்று அவரது பிறந்தநாளை சர்ப்ரைஸாக, மொத்தப்படக்குழுவினரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடி அவரை மகிழ்வித்துள்ளனர். ஆலன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழில் முழுமையான காதல் படங்கள் வருவது மிகவும் அரிதாகவிட்டது அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், ஒரு முழுமையான ரொமான்ஸ் வாழ்வின் அழகை…
Read More
விஷாலின் செயலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்! இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் !

விஷாலின் செயலால் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த விடியல்! இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம் !

  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC யில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டிக்க பாரத பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தி வேண்டுகோள் வைத்தார், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்டு செய்து உத்தரவிட்டார்கள். மேலும் இது தொடர்பான…
Read More
நம் சென்னையில் இருந்த இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் தற்போது அது மூடப்படவுள்ளது!

நம் சென்னையில் இருந்த இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் தற்போது அது மூடப்படவுள்ளது!

இந்தியாவின் முதல் பீச் டிரைவ்-இன் தியேட்டர் மற்றும் 1990களில் சென்னையின் முக்கிய அடையாளமான பிரார்த்தனா பீச்-டிரைவ்-இன் தியேட்டர் பிரீமியம் குடியிருப்பு வளாகத்தை உருவாக்க தயாராக உள்ளது. 1991ம் ஆண்டு இந்தியாவின் முதல் பீச் டிரைவ் இன் தியேட்டர், சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலையில் உருவாக்கப்பட்டது..பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டர் என்ற திறந்தவெளி திரையரங்கம், அடுத்து ஆராதனா என்ற உட்புற திரையரங்கம் திறக்கப்பட்டது. காரில் நேரடியாக பிரார்த்தனா தியேட்டருக்குச் சென்று காரில் இருந்தபடியும், பக்கத்தில் நாற்காலியைப் போட்டு அமர்ந்தும், பாயைப் போட்டு படுத்தபடி, மிகப் பெரும் திரையில் படம் பார்ப்பது சென்னைவாசிகளுக்கு புது அனுபவமாக இருந்துச்சு. ஆனா இந்த கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொழில்களில் சினிமா தொழிலும் ஒன்றாக இருந்தது. பல தியேட்டர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.. அப்படி பாதிப்பை சந்தித்த தியேட்டர்களில் பிரார்த்தனா தியேட்டரும் அமைந்தது. கடந்த நான்கு வருடங்களாகவே அந்தத் தியேட்டர் மூடப்பட்டுக் கிடந்தது.இப்போது தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று…
Read More
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒரே கல்வி நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையில் மிகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களையும், இயக்குநர்களையும் உருவாக்கி வரும் தனித்துவம் மிக்க நிறுவனமாகும். இந்தியாவிலேயே முதன் முறையாக திரைப்பட தொழில்நுட்பங்களுக்கென 2016-2017ஆம் கல்வி ஆண்டு முதல் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பெற்று இளங்கலை காட்சிக்கலை (Bachelor of Visual Arts) எனும் நான்கு ஆண்டு கால பட்டப்படிப்புகளை பயிற்றுவித்து வரும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில், 2023-2024ஆம் கல்வி ஆண்டில் கீழ்க்கண்ட பிரிவுகளில் பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. இளங்கலை காட்சிக்கலை ( ஒளிப்பதிவு) – Bachelor of Visual Arts…
Read More
மீண்டும் தமிழ்திரைக்கு வரும் நடிகை மீராஜாஸ்மின்!

மீண்டும் தமிழ்திரைக்கு வரும் நடிகை மீராஜாஸ்மின்!

                                                                                                       மீண்டும்திரையில்மக்கள்மனம்கவர்ந்தநடிகைமீராஜாஸ்மின்! தமிழ்மலையாளதிரைப்படங்களில்முன்னணிநாயகியாக,  இளைஞர்கள்மனதைக்கிறங்கடித்தவர்நடிகைமீராஜாஸ்மின். தற்போது10 வருடங்களுக்குபிறகுமீண்டும்திரையில்தோன்றுகிறார்.   காதல்பிசாசாகமக்கள்மனதைகொள்ளையடித்துசென்றமீராஜாஸ்மின்தமிழ்ரசிகர்இதயங்களைகொள்ளைகொள்ளும்  வகையில்மீண்டும்தமிழ்திரைப்படங்களில்நடிக்கவுள்ளார்.  ரன், சண்டகோழிபடங்களில், தனதுஅழகுகொஞ்சும்நடிப்பால், ரசிகர்களைஆச்சர்யபடுத்தி, விஜய், அஜித், தனுஷ், மாதவன், விஷால், பிரசாந்த், எஸ்ஜேசூர்யா, எனதமிழின்முன்னணிநடிகர்களுடன்ஜோடிசேர்ந்து, ரசிகர்கள்மத்தியில்நீங்காதஇடம்பிடித்தமீராஜாஸ்மின்பலவருடங்களாகநடிப்பிலிருந்துவிலகிஇருந்தார். அதையெல்லாம்ஈடுகட்டும்விதமாக, நிறையதமிழ்படங்களில்நடிக்கதிட்டமிட்டுள்ளநடிகைமீராஜாஸ்மின்தற்போதுமீண்டும்  பலதமிழ்படங்களில்ஒப்பந்தம்ஆகியுள்ளார். விரைவில்அவர்நடிக்கவுள்ளபடங்கள்பற்றியஅதிகாரப்பூர்வதகவல்வெளியாகவுள்ளது. ரசிகர்களுடன்இன்னும்நெருக்கமாகஇருக்கவேண்டும்எனமுடிவெடுத்துள்ளமீராஜாஸ்மின், பலகாலமாகசோசியல்மீடியாபக்கம்வராமல்இருந்தமீராஜாஸ்மின்தற்போதுஇன்ஸ்டாகிராமில்(Instagram) புதிதாககணக்குதொடங்கிஇன்றுஒருநாள்முதலே(55K) 55 ஆயிரம்ரசிகர்களைபெற்றுள்ளார், மேலும்இவர்  மீண்டும்வந்ததில்ரசிகர்கள்மத்தியில்நல்லவரவேற்புஉள்ளது. மேலும்அவர்இயக்குநர்சத்யன்அந்திக்காட்இயக்கிய‘மகள்’படத்தில்தான்நடிப்பதுகுறித்துஅவர்பகிர்ந்துள்ளதுரசிகர்களுக்குஇன்பஅதிர்ச்சியாகஉள்ளது. நமதுமனதில்நீங்காஇடம்பிடித்திருந்தமீராஜாஸ்மின்மீண்டும்நம்மைஅசரவைக்கவருகிறார்.
Read More