பிரசாத் தயாரிப்பில் நாளை ரீலீஸ் ஆக உள்ள படம் “ஸ்பைடர் “மகேஷ்பாபு, ராகுல் பிரித்தி சிங் ஜோடி நடித்துள்ள இப்படத்தை தமிழ் சினிமாவின் முன்ணனி இயக்குனர் முருகதாஸ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். தமிழகத்தில் அதிகமான தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ள ஸ்பைடர் படத்தை தமிழ்நாடு, கர்னாடகாவில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் 21 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ராஜ பக்சே பினாமி என்று சர்ச்சைக்குள்ளான இந்த லைக்கா நிறுவனம் தமிழ் திரைப்பட துறையில் தயாரிப்பு, விநியோகம் என இரு துறைகளிலும் வியாபாரம் செய்து வருகிறது. ஆனாலும் லைக்காதயாரித்து ரீலீஸ், மற்றும் விநியோகம் செய்த எந்த படமும் தமிழ்நாட்டில் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை.
முன்னர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வெளியான கத்தி அசலை தேத்தவே கடுமையாக போராட வேண்டி இருந்தது. தற்போது லைக்காதமிழ் சினிமா வியாபாரத்தில் நாங்களும் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த முருகதாஸ் மூலம் ஸ்பைடர் படத்தை வாங்கி உள்ளது. முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் ரீலீஸ் ஆகாத சூழலில் இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ள பிரம்மாண்ட படைப்பு என்கிற விளம்பரத்துடன் களமிறங்குவதால் ஸ்பைடர் படத்துக்கு தமிழ்நாட்டில்அதிகமான தியேட்டர்கள் கிடைத்துள்ளது. தமிழில் அஜீத், விஜயகாந்த், சூர்யா விஜய் என முண்னனிநாயகர்களை முன்னிறுத்தி படங்களை இயக்கி பிரபலமான முருகதாஸ் மகேஷ்பாபுவுடன் இணைந்து தமிழ் படம் இயக்கியுள்ளார்.
இயக்குனர்முருகதாஸூக்கு என்று தமிழ் சினிமாவில் தனித்துவம்மிக்க ரசிகர் கூட்டம் இல்லை. என்ன தான் நேரடி தமிழ் படம் என கூறினாலும் மகேஷ்பாபு நடித்த தெலுங்கு டப்பிங் படமாகவே இங்கு ரசிகர்களால் ஸ்பைடர் காணப்படும். நேரடி தமிழ் படங்களே வசூலில் இங்கு தடுமாறிக் கொண்டிருக்கையில் ஸ்பைடர் வசூலில் சாதிக்குமா? என்பதே வியாபார வட்டாரத்தில் விவாதிக்கப்படுகிறது.
மேலும் அஜீத், விஜய்க்கு போட்டியாகவே மகேஷ் பாபு இங்கு களமிறக்கபடுவதாக அவரது ரசிகர்கள் கருதும் வாய்ப்பு இருப்பதால் ஸ்பைடர் படத்தை தமிழ் சினிமாவின் முண்னணி ஹீரோக்களின் ரசிகர் வட்டாரம் குறிப்பாக விஜய், அஜீத், குர்யா ரசிகர்கள் புறக்கணிக்க முடிவு எடுத்திருப்பதாக ரசிகர் மன்ற வட்டார தகவல்.
அடிசினல் ரிப்போர்ட்:
இதனிடையே மகேஷ்பாபு நடித்த படங்கள் 150 கோடி வரை வசூல் செய்யும் என கூறப்படுகிறது. அதேவேளை ஸ்பைடர் படத்துக்கு 145 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளதாக கூறுகின்றனர். மகேஷ்பாபு தெலுங்கில் நடித்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு ரீலீஸ் செய்யப்பட்டதில் கிடைத்த வருவாய் லட்சக்கணக்கில் மட்டுமே.. முதல் முறையாக ARமுருகதாஸ் இயக்கம் என்பதால் நேரடி தமிழ் படமாக “ஸ்பைடர் ” எடுக்கப்பட்டுள்ளது என்கிறார் தயாரிப்பாளர் பிரசாத். தெலுங்கில் ஸ்பைடர் 84 கோடிக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.
FMS உரிமை சுமார் 20 கோடிக்குள்ளாக வியாபாரமாகியிருக்கலாம் என தெரிகிறது. தமிழ்நாடு, கர்னாடகாவில் ஸ்பைடர் படத்தை வெளியிடும் விநியோக உரிமையை 21 கோடிக்கு லைக்கா வாங்கியுள்ளது.தமிழ்நாட்டில் குறிப்பிட்ட ஏரியாவில் எம்.ஜி அடிப்படையிலும் சில பகுதிகள் விநியோக முறையிலும் லைக்கா நிறுவனம் தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் வியாபாரத்தை முடித்துள்ளது.
லைக்கா நிறுவனம் தயாரிப்பு துறையில் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. குறிப்பிடத்தக்க வெற்றியை தமிழ் சினிமாவில் லைக்கா பதிவு செய்ய இயலவில்லை. ஸ்பைடர்லைக்காவை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லுமா.இல்லை லைக்க செண்டிமெண்ட் மகேஷ்பாபுவை தொற்றிக் கொள்ளுமா என்பதை பார்ப்போம்.
ஏரியா அடிப்படையில் விலை நிலவரம் : சென்னை – 1.50 கோடி, செங்கல்பட்டு – 4கோடி, கோவை-3.50 கோடி, மதுரை – 2 .50 கோடி, சேலம் – 1.70 கோடி, தநல்லை – 1.10 கோடி,
வட, தென்னாற்காடு – 2 கோடி.
– ராமானுஜம்