சுரேஷ் காமாட்சிதான் மாநாடு படத்தை இந்த விழா வரை கொண்டு வந்து இருக்கார்- சிம்பு ஹேப்பி!

சுரேஷ் காமாட்சிதான் மாநாடு படத்தை இந்த விழா வரை கொண்டு வந்து இருக்கார்- சிம்பு ஹேப்பி!

வி ஹவுஸ் புரொடக்சன் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில்   வெங்கட்பிரபு  இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள படம் ‘மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன் கதா நாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர் களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி. மகேந்திரன்,  டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்து உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இந்தப்படத்தின் ப்ரீ ரிலீஸ் புரமோஷன் நிகழ்ச்சி இன்று காலை சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி தியேட்டரில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர்கள் டி.சிவா, சத்யஜோதி தியாகராஜன், சித்ரா லட்சுமணன், எஸ்.ஆர்.பிரபு, கே.ராஜன், தனஞ்செயன், விநியோகஸ்தர் சுப்பையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, “இந்தப்படம் பண்ணலாம்…
Read More
மிக மிக அவசரம்… பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு! – கலைப்புலி தாணு பாராட்டு!!

மிக மிக அவசரம்… பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு! – கலைப்புலி தாணு பாராட்டு!!

சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படமான மிக மிக அவசரம் படம் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் நெகிழ்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார். இயக்குநர் சீமான், ஸ்ரீப்ரியங்கா, வழக்கு எண் முத்துராமன், இயக்குநர் ஈ ராமதாஸ், லிங்கா, அரவிந்த், சரவண சக்தி, வெற்றிக்குமரன், வீகே சுந்தர், அறிமுகம் சாமுண்டி நடித்துள்ள படம் மிக மிக அவசரம். கதை, வசனம் - ஜெகன்நாத். ஒளிப்பதிவு - பாலபரணி, படத் தொகுப்பு - சுதர்சன். இசை - இஷான் தேவ். மக்கள் தொடர்பு- எஸ் ஷங்கர். தயாரிப்பு, இயக்கம்- சுரேஷ் காமாட்சி. பெண் போலீசார் பிரச்சினைகளை அலசும், அதே நேரம் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது மிக மிக அவசரம். இந்தப் படம் குறித்து திரையுலகில் ஏற்கெனவே நல்ல 'டாக்' உள்ள நிலையில், படத்தின் சிறப்புக் காட்சியை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி. படம் பார்த்து…
Read More
அல்வா வாசு இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை! – சுரேஷ் காமாட்சி வேதனை!

அல்வா வாசு இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை! – சுரேஷ் காமாட்சி வேதனை!

700-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அல்வா வாசு சமீபத்தில் உடல்நலக் குறைவால் மதுரையில் காலமானார். பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டதால் அவருடைய உடல்நிலை மோசமடைந்து காலமானார். இவருடைய இறுதிச்சடங்கில் அவருடன் நடித்தவர்கள் மற்றும் திரையுலகினர் யாரும் கலந்து கொள்ளவில்லை என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் , " சுமார்ர்  36 ஆண்டு காலங்கள் கலை உலகில் பன்முக தோற்றங்களில் நடித்துள்ள அல்வா வாசுவின் இறுதி நாட்கள் எண்ணற்ற துயரங்களைக் கொண்டவையாவே அமைந்துள்ளது. இவருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவம் பார்க்க போதிய நிதியில்லாமல் நெருக்கடியில் இருந்தபோது கோடிகளில் புரளும் யாரும் எந்த உதவியும் செய்ய முன்வரவில்லை. ஏன்? இறுதிச் சடங்கிற்கு கூட யாரும் போகவில்லை. காரணம் இவர்களின் அளவுக்கு இறந்தவரிடம் வசதியில்லை. அல்வா வாசுவின் இறுதிநாட்களில் கூட இருந்து தன்னால் இயன்ற உதவிகளை  நடிகரும்…
Read More