30 ஆண்டுகள் – 5 மொழிகள் அசராத ஸ்டண்ட்  மாஸ்டர் ஸ்டன் சிவா!

30 ஆண்டுகள் – 5 மொழிகள் அசராத ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா!

திரையுலகைப் பொறுத்தவரை உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் துறை என்றால் ஸ்டண்ட் கலைஞர்கள் பணியாற்றும் துறைதான். அந்தத் துறையில் 30 வருடங்கள், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து இந்திய மொழி சினிமாக்களிலும் பணியாற்றி சாதனை செய்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டன் சிவா. இந்தியாவின் அனைத்து திரைப்பட பிரபலங்களுடனும் இவர் பணி புரிந்திருக்கிறார். இப்போது நடிகராகவும் பரிமளிக்க ஆரம்பித்துள்ளார். இந்த வருடம் ஆரம்பமே அவருக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது என்று சொல்லலாம். இந்த பொங்கல் தினத்தன்று இவர் பங்களிப்பு செய்திருக்கும் 4 படங்கள் வெளியாகின்றன. முதலாவதாக, தெலுங்கில் இன்று ரிலீசான ‘கிராக்’ #krack படத்தில் ரவி தேஜாவுக்கு வில்லனாக நடித்திருக்கிறார். இரண்டாவதாக சிம்புவின் நடிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கல் திருநாளில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாக காத்திருக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தில் வில்லன் ரோலில் இவர்தான் கலக்கியிருக்கிறார். மூன்றாவதாக ஜெயம் ரவியின் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘பூமி’ படத்தில்…
Read More