சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ எப்படி இருக்கிறது ?

சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ எப்படி இருக்கிறது ?

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்போடு வெளி வந்து இருக்கும் கங்குவா திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறதா ? 1000 வருடத்திற்கு முந்தைய காலம், நிகழ் காலம் என இரண்டு கால கட்டத்தில் நடக்கும் கதை. அறிவியல் ஆராய்ச்சி கூடத்திலிருந்து ஒரு சிறுவன் தப்பிக்கிறான் அவன் கோவாவில் பவுண்டி ஹண்டராக இருக்கும் சூர்யாவை தேடி வருகிறான், அவனுக்கும் சூர்யாவுக்கும் என்ன தொடர்பு எனும் போது ஆயிரம் வருடத்திற்கு முன்னால் கதை விரிகிறது. அந்த காலகட்டத்தில் சூர்யாவுக்கும் அந்த சிறுவனுக்கும் என்ன நடந்தது. அந்த சிறுவனை கொல்ல துரத்துபவர்கள் யார்? நிகழ்காலத்திலும் கடந்த காலத்திலும் அந்த சிறுவனை சூர்யா காப்பாற்றுகிறாரா ? என்பது தான் படம் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டத்தின் உச்சம். படம் விசுவல் டிரீட், கலை இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் கைவண்ணத்தில் வரலாற்று காட்சிகள் அனைத்தும் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. யாரும் தனி நடிகர்களாக…
Read More
கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!

கார்த்தியுடன் இணையும் இயக்குநர் நலன் குமாரசாமி!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் 'கார்த்தி 26' எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. 'சூது கவ்வும்', 'காதலும் கடந்து போகும்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கார்த்தி கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க விழாவுடன் தொடங்கியது என்றும், இதுவரை 50 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது என்றும் படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. கதை சொல்லும் உத்தியில் புதிய பாணியை பின்பற்றி வெற்றி பெற்ற படைப்பாளியான…
Read More
‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ என பெயரிடப்பட்டுள்ளது

‘சூர்யா 42’ படத்தின் டைட்டில் ‘கங்குவா’ என பெயரிடப்பட்டுள்ளது

இந்திய சினிமாவில் 2023-24-ம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இயக்குநர் சிவா எழுத்து இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, திஷா பதானி, யோகி பாபு மற்றும் பலர் நடித்து இருக்கக்கூடிய ‘சூர்யா 42’ திரைப்படம் உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பரில் வெளியான இந்தப் படம் குறித்தான அறிவிப்பு, மோஷன் போஸ்டர் வீடியோ என இவை அனைத்தும் படம் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே அதிகரித்தது. ரசிகர்கள் ஒவ்வொருவரும் படத்தின் டைட்டில் என்னவென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். தற்போது, தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் ‘சூர்யா 42’ படத்தின் தலைப்பை ‘கங்குவா’ என அறிவித்துள்ளது. நெருப்பின் சக்தி மற்றும் வலிமையுள்ள வீரன் என்பது இதன் பொருள். இந்தப் படம் பத்து மொழிகளில் 3டி-யில் உருவாவதால் அனைத்து வகையான பார்வையாளர்களையும் கனெக்ட் செய்யும் வகையிலான தலைப்பு என்பது முக்கியமானது. இதன் பொருட்டே, ‘கங்குவா’ என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்குமாக இறுதி செய்யப்பட்டு இன்று…
Read More

நகைச்சுவையும், திகிலும் கலந்த ‘காட்டேரி’

    தமிழ் திரை உலகில் பேயை வைத்து ' யாமிருக்க பயமே' எனும் நகைச்சுவை திரைப்படத்தை இயக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இயக்குநர் டீகே இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'காட்டேரி'. ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் அபி & அபி பிக்சர்ஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா, இயக்குநர் டீகே, நாயகிகள் ஆத்மிகா, வரலட்சுமி சரத்குமார், நாயகன் வைபவ் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு உள்ளிட்ட படக்குழுவினரும், திரையுலகினரும் கலந்து கொண்டனர். இதில் நடிகை ஆத்மிகா பேசுகையில்,.'' திரைத்துறையில் அறிமுகமான பிறகு இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானேன். ஸ்டுடியோ கிரீன் எனும் பிரபலமான பட…
Read More
சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

சீயான் விக்ரம் – பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

  'சீயான் 61' பட தொடக்க விழா சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர்…
Read More