18
Apr
கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறும் பொருட்டு சென்னை கோட்டையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த , முத்தரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளதையடுத்து இதர பணிகள் தொடங்க ஆயத்தமாகி வருவதாக தகவல் வருகிறது.. கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டம் டிஜிட்டல்கட்டணக் கொள்ளை மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தால் மார்ச் 16 ஆம் தேதி முதல்தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல சினிமா தொழிலாளர்கள் வேலைஇழந்து பணக்கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பட படங்களை திரையிட முடியாமல் படக்குழுவினர் உள்ளனர். இந்த பிரச்சனையைதமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என…