ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் பிறந்த நாள்- ஸ்பெஷல் ரிப்போர்ட்!

எழுத்தாளர்களில் பலரும், திரைப்பட இயக்குநர்களில் பலரும் தங்கள் சிறுவயதிலும், இளமைப் பருவத்திலும் விருப்பக் கனவாய் கொண்டிருந்தவைகளையே பிற்காலத்தில் படைப்பாக்குகிறார்கள்.‘ஸ்பீல் பெர்க் ‘கும் அப்படித்தான். ஆனால், அவருடைய கனவு கள் வித்தியாசமானவை, மிகப் பெரியவை. ஸ்பீல் பெர்க் சக்திமிக்க இயக்குநராகி பெருமளவில் செல்வத்தைக் குவிப்பதற்குக் காரணமாயிருந்தது அவருடைய நுண்ணறிவேயாகும். ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் 1947-ல் இதே டிசம்பர் 18-ஆம் நாள் பிறந்தார். பிறந்த இடம் ஸின் ஸினாட்டி (அமெரிக்க ஓஹியோ மாநிலம்). சின்ன வயதிலேயே விசித்திரமான பொருட்களின் மீதும், அதிசயமான விஷயங்களிலும் ஆர்வம் உள்ளவர் அவர். வானத்தில் இருந்து எரிகற்கள் மழையாய் விழு வதைப் பார்க்க அதிகாலை 3 மணிக்குத் தனது தந்தை யோடு மலைப்பக்கம் சென்றிருக்கிறார். அவருடைய தந்தை ஓர் எலக்ட்ரிகல் என்ஜினீயர். அமெரிக்கா அப்போது கம்ப்யூட்டர் தயாரிப்பில் இறங்கியிருந்தது. அவர் தனது தொழிலை முன்னிட்டு குடும்பத்தோடு ஊர் ஊராய் மாறியபடி இருந்தார். தந்தையின் நேர உணர்வு, எதையும் நேர்த்தியாகச் செய்யும் தன்மை…
Read More