சிவகுமார் சால்வை விவகாரம் உண்மை என்ன?

சிவகுமார் சால்வை விவகாரம் உண்மை என்ன?

சிவக்குமார் சால்வையை வீசி எறிந்தது இப்போது வைரலாகி வருகிறது. ஆனால் ஒரு பரபரப்புக் காட்சிக்கு ஒரு வீடியோ கிடைத்தால் எப்படி வேண்டுமானாலும் செய்தியாக்கிக் கொள்ளலாம் என்ற அரை வேக்காட்டு மீடியா உலகை என்ன என்று சொல்வது? காரைக்குடி நடந்த பழ.கருப்பையா புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் திரு. சிவகுமார். நிகழ்ச்சியில் திரு. பழ. கருப்பையாவைப் பாராட்டிப் பேசியவர், அவரின் செயற்கரிய செயல் ஒன்றைக் குறிப்பிட்டு அவர் காலைத் தொட்டு வணங்கியும் இருக்கிறார். இப்படியானவர் நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும் போது ஒரு பெரியவர் சிவகுமாரை மறித்து சால்வை அணிவிக்க முற்பட்டுள்ளார். அதை சட்டென்று பறித்து, 'எனக்கு சால்வை போடறதே பிடிக்காதுன்னு தெரியும்ல'ன்னு பக்கத்தில் இருந்தவரிடம் உணர்ச்சி மேலிட விசிறியிருக்கிறார் சிவகுமார். இந்தக் காட்சியைப் படம் பிடித்தவர்கள். யாரிடமும் எந்த விளக்கமும் கேட்கவில்லை. உடனே இதை பரபரப்புச் செய்தியாக்கி உள்ளனர். எப்படி என்றால், ஒரு வயதான ரசிகர் சால்வை…
Read More