14
May
நடிகர்கள்: சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், SJ சூர்யா, சமுத்திரகனி, RJ விஜய், பால சரவணன், முனீஸ்காந்த், காளி வெங்கட், சிவாங்கி தயாரிப்பு: லைகா புரொடக்ஷன், SK புரொடக்ஷன் இயக்குனர்: சிபி சக்ரவர்த்தி இசையமைப்பாளர்: அனிருத் ஒளிப்பதிவு: KM பாஸ்கரன் படத்தொகுப்பு: நாகூரான் ராமசந்திரன் கல்லூரியில் யாருக்கும் அடங்காமல் தன் போக்கில் டானாக சுற்றி கொண்டிருக்கும் ஒருவன், தன்னை எப்படி கண்டுணர்ந்தான் என்பதே கதை. படத்தின் மொத்த பலமும் சிவகார்த்திகேயன் தான். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தனது திரை ஆளுமையால் படத்தை கட்டி இழுத்துள்ளார். காமெடி, செண்டிமெண்ட், காதல் என மூன்றும் கலந்து அமைந்த திரைக்கதையில் ஹீரோவுடைய பங்கு மிகவும் முக்கியமானது. இவை அனைத்தையும் தேவையான இடத்தில் தேவையான அளவு வழங்கி இருக்கிறார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவின் கமர்சியல் பார்முலா மறைந்து போய், வேறு பக்கம் திசை திரும்பியிருந்த படங்களுக்கு மத்தியில், மீண்டும் ஒரு முழுக்க முழுக்க கமர்சியல் எலமெண்ட்க்குகளை அள்ளி…