பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  டைரக்ட் செய்த ஷார்ட் பிலிம் ‘ஈகே கூகுள்”

பாலாவின் உதவியாளர் வள்ளுவன் டைரக்ட் செய்த ஷார்ட் பிலிம் ‘ஈகே கூகுள்”

பாலாவின்  உதவியாளர்  வள்ளுவன்  'ஓகே கூகுள்'  என்கிற  7  நிமிடக் குறும்படத்தை  இயக்கியுள்ளார். வள்ளுவன்  பிரபல  எடிட்டர்  லெனினிடம்  உதவியாளராக  இருந்து  எடிட்டிங் தொழில்நுட்பத்தையும்  பாலாவிடம்  உதவியாளராக  இருந்து  இயக்குநர்  பயிற்சியையும்  பெற்றவர். வள்ளுவனின் அண்ணன்   தியாகராஜன்  (நாடக கலைஞர் - திணை நிலவாசிகள்) 'தமிழ் ஸ்டுடியோ'வின் தன்னார்வலராக இருந்துள்ளார். ஒருமுறை பிலிம் நியூஸ் ஆனந்த னுக்கு ஒரு கண்காட்சி  நடத்தினார்கள். அப்போது  அவருக்கு உடல்நிலை சரியில்லா மல் போகவே  அவருக்குப் பதிலாக வள்ளுவன் அந்தப் பணியை மேற்கொள்ள அந்த விழாவுக்கு வந்த  எடிட்டர் லெனின் இவரைப் பற்றி  விசாரிக்கவும்  மறைந்திருந்த சினிமா ஆசை வெளிப்பட்டு  அவரது  உதவியாளராகியிருக்கிறார். பின்னர் எடிட்டர்  கிஷோர்,  ஜி. சசிகுமார் , எல்.வி. கே. தாஸ் ஆகியோருடன் எடிட்டிங் துறை சார்ந்த நட்பான அனுபவங்கள்.  அவர்கள் மூலம் கிடைத்த நட்பில் பாலாவிடம் இணைந்திருக்கிறார் . உதவி எடிட்டராக இருந்த போது பாலாவின் படப்பிடிப்பிற்குப்  போய்  பார்த்தபோது  தான்…
Read More
பத்திரிகையாளர்  கோடங்கியின் குறும்படம் மூலம் நடிகராகிறார் ஒற்றன் துரை!

பத்திரிகையாளர் கோடங்கியின் குறும்படம் மூலம் நடிகராகிறார் ஒற்றன் துரை!

 நண்பர்கள் நலம் விரும்பிகள் அனைவருக்கும் வணக்கம். நீண்ட காலமாக உங்களில் ஒருவனாக பயணித்த நான் (கோடங்கி ஆபிரகாம்)  இப்போது அடுத்த நகர்வாக உருவாக்கியுள்ள குறும்படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். 'ருச்சி சினிமாஸ்' & 'பாஸ்ட் மெஸெஞ்சர்' இணைந்து வழங்கும் பெயரிடப்படாத "Short Film No. 1"  குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டு அன்று  வெளியாகிறது. சமூகம் என்ற சுழலில் சிக்கி அவலமான தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண் அந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே குறும்பட கதை. நடிப்பு கலைஞர்கள்: கதை நாயகி - கயல்விழி, ஜோயல் பென்னட், 'திடீர் தளபதி' சதீஷ்முத்து, ஹிதயத்துல்லா, 'ஒற்றன்' துரை தயாரிப்பு நிறுவனம்: ருச்சி சினிமாஸ் & பாஸ்ட் மெஸெஞ்சர் தொழில் நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: அனிஷ் ஆஞ்சோ இசை: விசு விளம்பர வடிவமைப்பு: SMB கிரியேஷன் மணிபாரதி செல்வராஜ் செய்தி தொடர்பு: யுவராஜ் தயாரிப்பாளர்:…
Read More
நவ-19ல் பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா..!

நவ-19ல் பிரமாண்டமாக நடைபெறும் லிப்ரா குறும்பட விழா..!

நளனும் நந்தினியும், சுட்ட கதை, நட்புன்னா என்னான்னு தெரியுமா உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ள லிப்ரா புரடக்சன்ஸ் நிறுவனம், தற்போது குறும்பட இயக்குனர்களின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக குறும்பட போட்டி ஒன்றை மிக பிரமாண்டமாக நடத்த இருக்கிறது. இந்த குறும்பட போட்டியில் கலந்துகொள்ள போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்புமாறு கடந்த ஜூலையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது லிப்ரா புரடக்சன்ஸ். அந்தவிதமாக போட்டிக்கு வந்த 946 படங்களில் இருந்து சிறந்த 53 குறும்படங்கள் இறுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள சிறந்த 53 குறும்படங்கள் 1. Gangs of 47 2. Koorpi 3. Karmachakram 4. All ilatha Roobam 5. Mutham 6. The Ring 7. The Affair 8. Vanam 9. Thirantha Puthagam 10. Kadan 11. Naan 8 12. Savadaal 13. Nil 14. Thamizhachi 15. Theerathu 16. Yeman 17. Rays…
Read More
சினிமாவுக்கு நாங்கள் எதிரி அல்ல! – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

சினிமாவுக்கு நாங்கள் எதிரி அல்ல! – அன்புமணி ராமதாஸ் பேச்சு!

பதநிச கம்யூனிகேஷன்ஸ் தயாரிக்க, ராம்போ நவகாந்த் இயக்கத்தில் குணாநிதி நடித்திருக்கும் குறும்படம் 'எ ஸ்ட்ரோக் ஆஃப் டிஸ்ஸொனன்ஸ்'. ஒரு வயலின் இசைக்கலைஞனை பற்றிய இந்த குறும்படத்தின் சிறப்பு காட்சி சென்னை பிரசாத் லேபில் நடந்தது. விழாவில் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார். இக்குறும்படத்தை முன்பே பிரத்யேகமாக பார்த்த உலகநாயகன் கமல்ஹாசன், வீடியோ பதிவில் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். தான் உருவாக்க முயற்சி செய்த கிழக்கு ஐரோப்பிய பாணி திரைப்படங்களை இந்த இளம் குழுவினர் செய்திருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரிந்த இந்த இளைஞர்கள் மேலும் நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும். எங்களுக்கு போட்டியாக வர வேண்டும் என்று வாழ்த்தினார். இளைஞர்கள் இணைந்து உத்வேகத்தோடு இந்த குறும்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். ஒரு சினிமா இசை வெளியீட்டு விழாவில் தான் அன்புமணி ராமதாஸை சந்தித்தேன். அன்று தொடங்கிய நட்பு இன்று வரை தொடர்கிறது. அரசியலில் எதிர் துருவங்களில் இருந்தாலும் நட்பு தொடர்கிறது. ரஜினிகாந்துக்கும், பாமக இயக்கத்துக்கும்…
Read More