13
Nov
சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா. அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் 'நெஞ்சில் துணி விருந்தால்' படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில் நடித்திருப்பவர் தான் இந்த ஷாதிகா. படத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும் கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் . இதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு வரலாறே வைத்துள்ளார் இந்த ஷாதிகா . சென்னைப் பெண்ணான இவர், லயோலாவில் பி.டெக் படித்து முடித்தவர். இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர்.அரிராஜனின் 'மங்கை' தொலைக்காட்சித் தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு…