24
Mar
தாய்த்தமிழ் பேசும், நம்வீட்டு பெண் திரையில் ஜொலிப்பது தமிழ் திரையுலகில் அதிசயமாகவே நிகழ்ந்து வருகிறது. வெளிமாநில நடிகைகள் கோலோச்சும் தமிழ் திரையுலகில், தடைகளை தகர்த்து, அனைவரும் பாராட்டும் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார் துஷாரா விஜயன். ரசிகர்களின் நீண்ட நாள் ஏக்கதத்தை போக்கும் வகையில், தாய்த்தமிழ் மொழியில் பேசியும், நடிப்பிலும் அனைவரையும் கவர்ந்து, பெரு நட்சத்திரமாக வளர்ந்து வருகிறார் துஷாரா விஜயன். அசாத்தியமான இவரது திரைப்பயணம் பலரையும் வியக்க வைக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கன்னியாபுரம் ஊரைச் சேர்ந்த இவர் “போதை ஏறி புத்தி மாறி” படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து “அன்புள்ள கில்லி” திரைப் படத்திலும் மற்றும் “கண்ணம்மா” குறும்படத்திலும் நடித்தார். 6 வருடங்களாக திரையுலகில் சரியான வாய்ப்பு தேடி, வெகு பொறுமையுடன் காத்திருந்து, கிடைத்த வாய்ப்பில் தன் திறமையை நிரூபித்து இன்றைக்கு நட்சத்திர நடிகையாக மாறியுள்ளார். தற்போது தமிழின் மிக முக்கியமான இயக்குநரான பா.ரஞ்சித் இயக்கத்தில்…