’வட்டார வழக்கு’ – கிராமத்து கொண்டாட்டம் !

’வட்டார வழக்கு’ – கிராமத்து கொண்டாட்டம் !

கிராம வாழ்வியலை சொல்லும் படங்கள் எதுவும் இப்போது வருவதில்லை. அந்த வகையில் கிராமத்துக்குள் வாழும் மனிதர்கள் அவர்களின் பழக்க வழக்கம் எல்லாவற்றையும் இரத்தமும் சதையுமாக கண்முன் நிறுத்தும்படியாக உருவாகியுள்ளது வட்டார வழக்கு. 1980 கால கட்டத்தில்  மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை. இரு பங்காளி குடும்பங்களிடையே பல வருடமாக நிலவும் நிலப்பிரச்சனை, இது தான் படத்தின் மையம். ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நாயகன் சந்தோஷ  மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த சிலரை கொலை செய்து விடுகிறார். அந்த குடும்பம் அவரை கொலை செய்ய முயல்கிறது. பங்காளி சண்டை ஒருபுறம்.இருந்தாலும் காதலில் விழும் சந்தோஷ் ரவீனா மீது காதல் கொள்கிறார். பகை தீர்ந்ததா? சந்தோஷின் காதல் நிறைவேறியதா என்பதே   ’வட்டார வழக்கு’  படத்தின் கதை. டூலெட் படத்தில்  நாயகனாக அறிமுகமான  சந்தோஷ் நம்பீராஜன் இப்படத்தில் முரட்டு கிராமத்து வேடமேற்றுள்ளார். எதற்கெடுத்தாலும் கோபத்தோடு அருவா தூக்குவதும், காதலில் உருகுவதும் என அச்சு…
Read More
80 களின் கிராம வாழ்க்கை ‘வட்டார வழக்கு’ !!

80 களின் கிராம வாழ்க்கை ‘வட்டார வழக்கு’ !!

மதுரா டாக்கீஸ், ஆஞ்சநேயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வழங்கும், இயக்குநர் கண்ணுச்சாமி ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர்கள் சந்தோஷ் நம்பிராஜன், ரவீனா ரவி நடிப்பில் டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகும் திரைப்படம் 'வட்டார வழக்கு'. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்தது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசியதாவது, "'மாமன்னன்' படத்தில் அமைந்தது போல ஒரு கதாபாத்திரம் தான் ரவீனாவுக்கு இந்தப் படத்தில். மிக நேர்த்தியாக நடித்துள்ளார். கமர்ஷியல் படங்கள் என்பதை விட உண்மைக்கு நெருக்கமான படங்கள் விநியோகிப்பதில் தான் எனக்கு ஆத்மார்த்த திருப்தி. உங்கள் ஆதரவு நிச்சயம் வேண்டும்" என்றார். நடிகை ரவீனா ரவி, "2019-ல் நடித்தப் படம் இது. ராமச்சந்திரன் சார் நினைத்தது போல படம் வந்திருக்கிறது என நம்புகிறேன். நல்ல கதை இது. வருகிற 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மீடியா நல்ல விமர்சனம் கொடுத்து மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும்.…
Read More