03
Jul
‘ராக்கெட்ரி’ திரைப்படத்தையை மாதவன் எழுதி இயக்கி நடிப்பதோடு மட்டுமின்றி சரிதா மாதவன், வர்கீஸ் மூலன், விஜய் மூலன் ஆகியோருடன் இணைந்து படத்தைத் தயாரித்துள்ளார். சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ளார், சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார், பிஜித் பாலா படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல, கடினமாகவும், பல தடைகளை தகர்ந்தெரிந்தும் ஓடிகொண்டிருக்கும் ஒரு விஞ்ஞானியை பொய் வழக்கு போட்டு, அவரது வாழ்கையையே முடிக்கிறார்கள். விண்வெளியில் தன் சாதனைகளை புரிய வேண்டிய அவர் தன் மீது உள்ள கலங்கத்தை துடைக்க ஓட வேண்டியுள்ளது அவர் மேல் இருக்கும் கலங்கத்தை அவர் துடைத்தாரா, இந்தியாவின் விண்வெளி கனவு என்ன ஆனது என்பது தான் கதை. முதலில் நம்பி நாராயணன் போன்ற விஞ்ஞானி பட்ட கஷ்டங்களையும், கொடுமைகளையும் வெளி உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்ட முயற்சி எடுத்த மாதவனை பாராட்டியே ஆக வேண்டும். ஒரு உண்மை கதை என்பதாலும், நம்பி நாராயணன் போன்ற…