ஹாலிவுட் நெப்போலியன் எப்படி இருக்கிறார் ? 

ஹாலிவுட் நெப்போலியன் எப்படி இருக்கிறார் ? 

  ஆஸ்கார் விருது பெற்ற நடிகரான ஜோக்குவின் ஃபீனிக்ஸ் நடிப்பில், கிளாடியேட்டர் பட இயக்குநர் ரிட்லி ஸ்காட் இயக்கத்தில். பிரெஞ்சுப் பேரரசர் நெப்போலியன் போனபார்ட்டின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் விவரிக்கும் அதிரடியான பயோகிராஃபி படம் தான் இது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இப்படம், அதிகாரத்தை நோக்கிய நெப்போலியனின் போராட்ட பயணத்தைப் பற்றியும், அவர் மிகவும் காதலித்த ஜோசஃபினுடனான உறவைப் பற்றியும் விலாவாரியாக சொல்கிறது. நெப்போலியன் வராலாற்றின் நாயகன் இன்று வரையிலும் அவரின் வரலாற்றை சுற்றி ஆயிரம் வதந்திகள் இருக்கிறது. சர்ச்சைகள் இருக்கிறது. நெப்போலியன் பூமியில் செய்த விசயங்களை அத்தனை எளிதில் திரையில் கொண்டு வர முடியாது. கற்பனைக்கெட்டாத பல போர்களை நடத்தியவன். ஐரோப்பாவை நடு நடுங்க வைத்தவன். ரஷ்யாவை மாஸ்கோவை விட்டே ஓட வைத்தவன் அவனின் வாழ்க்கையை திரைகொள்ள பிரமாண்டத்துடன் அழகான கவிதை போல் சொல்கிறது இப்படம் பிரெஞ்சுப் புரட்சியின் போது, இளம் இராணுவ அதிகாரியான நெப்போலியன் போனபார்ட் தனது சாமர்த்தியத்தால்…
Read More