ரிபெல் போராளியாக மாறும் மாணவன் !!

ரிபெல் போராளியாக மாறும் மாணவன் !!

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ரிபெல். தமிழ் சினிமா வர வர கதை சொல்வதை தவிர்த்து, போராட்டங்களையும், அடக்குமுறைகளையும், சமூக கருத்துக்களையும் மட்டுமே சொல்வதை முதன்மையாகக் கொண்டு சினிமா எடுத்து வருகிறது. அந்த வகையில் கேரள பகுதியில் அடக்கி ஒடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்களின் கதையை சொல்லும் படமாக வந்திருக்கிறது ரிபெல் சுதந்திரத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் மூணாறு பகுதி கேரளாவுடன் இணைக்கப்பட, அங்கு தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்க்கும் தமிழர்களும், அருகில் அமைந்திருக்கும் கல்லூரியில் படிக்கும் தமிழ் மாணவர்களும், எப்படியெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் மையம். தேயிலைத் தோட்டத்தில் கஷ்டப்படும் பெற்றோர்களின் கஷ்டத்தை போக்க, படித்து பெரியளாகும் கனவில் கல்லூரிக்கு செல்கிறார்கள் ஜிவி பிரகாஷும் அவரது நண்பர்களும், அங்கு கல்லூரியில் கேரள மாணவர்கள் இரு கட்சிகளாக பிரிந்து தமிழ் மாணவர்களை ராக்கிங் செய்கிறார்கள். அவர்களின் கொடுமை எல்லை மீறி…
Read More
இன்று சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது கஷ்டமாக இருக்கிறது! ‘ரெபல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் !

இன்று சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது கஷ்டமாக இருக்கிறது! ‘ரெபல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் பா.ரஞ்சித் !

ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ரெபல்'. இப்படம் வரும் மார்ச் 22ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில்., இயக்குநர் நிகேஷ் பேசியதாவது... நான் கதை சொல்லப் போனபோது எனக்கு 24 வயது தான், ஆனால் ஞானவேல் ராஜா சார் என்னை நம்பி கதை கேட்டார். 10 நாள் ஷீட் செய்து, அவரிடம் காட்டினேன். அதன் பிறகு படம் முடியும் வரை, என்னிடம் கேள்வியே கேட்கவில்லை. ஞானவேல் ராஜா சாருக்கு இந்த நேரத்தில் என் நன்றியைக் கூறிக்கொள்கிறேன். இப்படத்தின் அனைத்து பணிகளிலும் எப்போதும் உறுதுணையாக இருந்த தனஞ்செயன்…
Read More
ஜீ. வி. பிரகாஷ் குமாரின்  ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது !!

ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது !!

இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரெபல்' திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'ரெபல்'. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், 'கல்லூரி' வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.…
Read More