ராம் சரணுடன் ஹோலி கொண்டாடிய இயக்குனர் சுகுமார்!

ராம் சரணுடன் ஹோலி கொண்டாடிய இயக்குனர் சுகுமார்!

புகழ் பெற்ற இயக்குநர் சுகுமாரும், 'குளோபல் ஸ்டார்' ராம்சரணும் காவிய பாணியிலான சினிமா முயற்சியில் இணையவுள்ளனர். எஸ். எஸ். ராஜமௌலியின் 'ஆர் ஆர் ஆர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது. 'ஆர் ஆர் ஆர்' படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான 'புஷ்பா' படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார். இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது. 'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் -சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 'ராக்ஸ்டார்' டிஎஸ்பி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ்…
Read More
கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்த ராம்சரண் ! தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் !

கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்த ராம்சரண் ! தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் !

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், இந்திய கிரிக்கெட்டின் நாயகனான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு வியப்பில் ஆழ்த்தும் பின்னூட்டங்களுடன் வைரலாகி வருகின்றன. இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராம் சரண் பகிர்ந்திருந்தார். அதனுடன் 'இந்தியாவின் பெருமையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி' என்றும் பதிவிட்டிருந்தார். ராம்சரனின் ரசிகர்கள் அவர் நடிப்பில் தயாராகி வரும் 'கேம் சேஞ்சர்' எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில்.. ராம் சரணும், எம் எஸ் தோனியும் சந்தித்து கொண்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், அதனை கொண்டாடி வருகின்றனர்.‌ அந்த புகைப்படத்தில் ராம் சரண்…
Read More
இந்திய சினிமாத்துறையே எதிர்பார்த்த ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

இந்திய சினிமாத்துறையே எதிர்பார்த்த ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான மெகா பவர் ஸ்டார் ராம்சரண் மற்றும் உபாசனா கொனிடேலா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இவர்களுக்கு தெலுங்கு திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய திரையுலகினரும் உலகமெங்கும் உள்ள ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் ராம்சரண் -உபாசானா சார்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி தன் மனமார்ந்த நன்றியை தெரிவித்திருக்கிறார். மெகா பவர் ஸ்டார் ராம்சரண்- உபாசனா தம்பதியருக்கு இன்று ( ஜூன் 20) பெண் குழந்தை பிறந்திருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட திருமதி உபாசனா ராம்சரணுக்கு இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்தது. இந்த நல்ல செய்தியால் மெகா ஸ்டார் குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், நலம் விரும்பிகள், ரசிகர்கள் என அனைவரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் சுமனா மனோகர் பேசுகையில், '' இன்று அதிகாலை உபாசனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை மற்றும் தாய்…
Read More
எப்படி இருக்கிறது RRR ?

எப்படி இருக்கிறது RRR ?

இயக்கம் - எஸ்.எஸ். ராஜமெளலி நடிகர்கள் - ராம்சரண், ஜூனியர் என்.டிஆர், ராம்சரண், அஜய் தேவகன், ஆலியா பட் பாகுபலி மூலம் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த, எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் ஆர்ஆர்ஆர். கோரோனா போராட்டங்களை தாண்டி பல தடைகளை கடந்து வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களை திருப்தி படுத்தியதா என்றால் கண்டிப்பாக திருப்திபடுத்தியுள்ளது. ரசிகர்கள் திரையரங்குகளில் கூச்சலிடுகிறார்கள் ஆனால் படமாக திரைக்கதையாக படம் அசத்துகிறதா என்றால் அது கேள்விக்குறி தான். 1920களில் சுதந்திரப் போராட்டகாலத்தில், வாழ்ந்த இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களை வைத்து கற்பனையாக ஒரு கதையினை உருவாக்கியிருக்கிறார் ராஜமெளலி. காட்டுக்குள் இருந்து கடத்தப்பட்ட தங்கை மல்லியைத் தேடும் பீம், அவரை பிடிக்க நியமிக்கப்படும் ராம ராஜூ. இருவரும் ஒன்றிணைந்து திரையில் நிகழ்த்தும் மாயாஜாலங்கள் தான் RRR. பீமா ஜீனியர் என் டி ஆர், படிக்காத தற்குறி, அடங்கிபோகும் நீரின் பிரதிபலிப்பு ஆனால் பொங்கும்போது மிரட்டுகிறார். பல இடங்களில்…
Read More
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்!

இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்!

ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகிய வற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது…
Read More
தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR)  ரிலீஸ்!

தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் ஆர் ஆர் ஆர் (RRR) ரிலீஸ்!

இந்தியாவெங்கும் ஆவலாக எதிர்பார்க்கப்படும், நட்சத்திரங்கள் நிறைந்த திரைப் படமான RRR, தசரா வெளியீடாக அக்டோபர் 13, 2021 அன்று உலகெங்கும் வெளியாகிறது. என்டிஆர், ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள் அணிவகுக்கும் RRR, சுதந்திர போராட்ட வீரர்களான கொமரம் பீம் மற்றும் அல்லூரி சீதாராம ராஜு ஆகியோரின் விடுதலைப் போராட்டத்திற்கு முந்தைய வாழ்க்கையை கற்பனை கலந்து காட்சிப்படுத்துகிறது. திரைப்படத்தின் வெளியீடு குறித்து பேசிய தயாரிப்பாளர் டி வி வி தனய்யா, “RRR-ன் படப்பிடிப்பு நிறைவை எட்டியுள்ள நிலையில், ரசிகர்களுக்கு இத்திரைப்படம் மூலம் விருந்து படைப்பதற்கு நாங்கள் ஆவலாக உள்ளோம். தசரா பண்டிகை போன்ற இத்திரைப்படத்தை திரையரங்கில் ரசிகர்களோடு கொண்டாடுவதற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்,” என்றார். டி வி வி தனய்யாவின் தயாரிப்பில், இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற இயக்குநர்களில் ஒருவரான எஸ் எஸ் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR, தெலுங்கு, தமிழ்,…
Read More