12
Nov
ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துவிட்டது! குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், நேற்று லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது. டீசர் ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி என்டர்டெய்னரில் கலக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது ! இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த அதிகாரி (ஐஏஎஸ் அதிகாரி) மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார். ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர், படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் முத்திரை,…