14
Dec
தற்போது இந்தி தெலுங்கு தமிழ் என இந்தியத் திரைப்படங்கள் உலக அளவில் திரையிடப் பட்டு வசூலில் கொடிகட்டி பறக்கலாம்..சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே இதற்கு முதன்முதலாய் விதை போட்டவர் நடிகர் ராஜ்கபூர்.. ரஷ்யாவில் ஜவஹர்லால் நேருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட இந்தியர் ராஜ்கபூர்தான் என்பார்கள்.. அந்த அளவுக்கு அவரின் படங்கள் ரஷ்யாவில் அமோகமாக ஓடின..! நடிப்பு தயாரிப்பு இயக்கம் மட்டுமின்றி சினிமா பற்றிய தொழில்நுட்பங்களும் ஜாம்பவானாக விளங்கியவர் ராஜ்கபூர். அதனால்தான் அவரை தி கிரேட்டஸ்ட் ஷோ மேன் ஃப் இந்தியா என்று பெருமையோடு பேசுவார்கள். இந்தியாவின் முதல் பேசும் படமான ஆலம் ஆராவில் (1931) நடித்த பிரிதிவிராஜ் கபூர் அவர்களின் மூத்த மகன்தான் ராஜ்கபூர்.. ! இன்றளவும் இந்தியாவின் நம்பர் ஒன் வசூல் படம் என்று பேசப்படுகிற mughal-e-azam (1960) படத்தில் அக்பர் ஆக வருவார் பிரிதிவிராஜ் கபூர்.. கம்பீரமான குரல் வளத்தோடு படம் முழுவதும் துவம்சம் செய்யும் அவரின் நடிப்பை காண…