தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

தனது அடுத்த படத்திற்காக துப்பாக்கி பயிற்சி செய்யும் கமலஹாசன் !

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்த பின் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் உடன் கூட்டணி வைத்துள்ளார். இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விக்ரம் பட வெற்றிக்கு பின்னர் ராஜ்கமல் நிறுவன தயாரிப்பில் கமல் நடிக்கும் படம் இதுவாகும். இது குறித்து அதிகாரப்பூர்வமாகப் படக்குழு சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். ஹெச் வினோத்தின் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற முந்தைய படங்கள் தற்போது வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.அதே போல மீண்டும் கமலை வைத்து மாபெரும் ஹிட் படத்தை கொடுப்பார் என்று சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில்  கமலின் 233 படத்தின் ஸ்டண்ட் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது https://twitter.com/RKFI/status/1699656596794814508
Read More
பிரபல நகைச்சுவை நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

பிரபல நகைச்சுவை நடிகரும் கமலின் நெருங்கிய நண்பருமான ஆர்.எஸ்.சிவாஜி காலமானார்!

  நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக பிரபலமாக அறியப்பட்டவர் ஆர்.எஸ். சிவாஜி. அதுமட்டுமல்லாமல், 1980, 90 களில் கமல்ஹாசனின் படங்களில் தவறாமல் நடித்து வந்தவர். கமலின் வெற்றிப்படங்களான 'விக்ரம்', 'சத்யா', 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்', 'குணா', 'கலைஞன்' என எல்லா படங்களிலும் நடித்துள்ளார். அதிலும் 1989ல் வெளியான 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் அவர் ஜனகராஜைப் பார்த்துப் பேசிய வசனமான 'தெய்வமே நீங்க எங்கயோ போய்ட்டீங்க' என்ற வசனம் மிகவும் புகழ்பெற்றது. இன்றளவும் பல திரைப்படங்களில் இந்த வசனமும் இடம்பெற்றுள்ளது. '8 தோட்டாக்கள்', 'வனமகன்', என இன்றும் சிறுசிறு வேடங்களில் நடித்துவரும் ஆர்.எஸ். சிவாஜி, 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவின் தந்தையாகவும் நடித்துள்ளார். நடிகர் கமல்ஹாசனுடனான இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்ட நிலையில், கமல்ஹாசன் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சம்பந்தப்பட்ட படங்களிலும் இவர் அதிகமாக நடித்துள்ளார். மேலும் இவர் அளித்த பேட்டி ஒன்றில் ‘நான் உயிரோடு இருப்பதற்கு காரணம் கமல்…
Read More