16
Nov
அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் விமர்சையாக நடைப்பெற்றது. சமீபத்திய மழையின்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை துணிச்சலாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி தமிழ் சினிமாவின் முன்னோடிகள் முன்னிலையில் டீசரை வெளியிட்டார். விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறப்பினர் விஜயமுரளி, கில்டு தலைவர் ஜாக்குவர் தங்கம், நடிகர் நட்டி உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் பிரியா வரவேற்றார். விழாவில் இசையமைப்பாளர் நவீன் படிஷா பேசும்போது, ‘இந்தப் படத்தின் நாயகன் ராம் நேரில் பார்க்கும்போது சாக்லேட் பாய் லுக்கில் இருக்கிறார். ஆனால் படத்தில் அவருடைய நடிப்பு டெரர் ரகமாக…