தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் தற்காலிகமாக நீங்கியது!

தீபாவளிக்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில் இருந்த சிக்கல்கள் தற்காலிகமாக நீங்கியது!

கோலிவுட்டில் அரசல் புரசலாக வெடித்து புதாகரமான விவகாரத்தால் திணறிக் கொண்டிருந்த   தமிழ்த் திரையுலகத்தில் திடீர் திருப்பமாக புதிய தமிழ்த் திரைப்படங்கள் வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளன. வி.பி.எஃப். கட்டணம் தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கங்களுக்கும், கியூப் நிறுவனத்திற்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால் புதிய திரைப்படங்கள் திரையிடுவது நிறுத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் கியூப் நிறுவனம் அதிரடியாக இந்த நவம்பர் மாதம் வரையிலும் வி.பி.எஃப். கட்டணம் ரத்து என்ற சலுகையை அறிவித்தது. இந்த ரத்து சலுகையை எதிர்பார்க்காத தயாரிப்பாளர் சங்கங்கள் இன்று அவசரமாக கூடி இது பற்றி விவாதித்தன. பின்பு இந்த 2 வார சலுகையைப் பயன்படுத்தி புதிய திரைப்படங்களை வெளியிடுவது என்று ஒருமித்தக் கருத்தினை எடுத்துள்ளன. தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரான இயக்குநர் இமயம் பாரதிராஜா இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள்…
Read More
கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் போராட்டம் முடிவுக்கு வந்துடுச்சு!

கோலிவுட் என்றழைக்கப்படும் தமிழ் சினிமாவில் கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறும் பொருட்டு சென்னை கோட்டையில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த , முத்தரப்பு பேச்சுவார்த்தை சமூகமாக முடிவடைந்துள்ளதையடுத்து  இதர பணிகள் தொடங்க ஆயத்தமாகி வருவதாக தகவல் வருகிறது.. கடந்த 47 நாட்களாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடந்து வந்தது. இந்தப் போராட்டம் டிஜிட்டல்கட்டணக் கொள்ளை மற்றும் திரையரங்க உரிமையாளர்களுக்கு எதிராக நடந்து வந்தது. இந்தப் போராட்டத்தால் மார்ச் 16 ஆம் தேதி முதல்தமிழகத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டன. மார்ச் 23 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் நடைபெற்ற படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல சினிமா தொழிலாளர்கள் வேலைஇழந்து பணக்கஷ்டத்தில் தவித்து வருகின்றனர். மேலும் பட படங்களை திரையிட முடியாமல் படக்குழுவினர் உள்ளனர். இந்த பிரச்சனையைதமிழக அரசு தான் தீர்க்க வேண்டும் என…
Read More