பணியாற்றாதீங்க: செயலாற்றுங்க – தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாரதிராஜா வேண்டுகோள்!

பணியாற்றாதீங்க: செயலாற்றுங்க – தயாரிப்பாளர் சங்கத்துக்கு பாரதிராஜா வேண்டுகோள்!

அண்மையில் நடந்து முடிந்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி அணியினர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவருமே நாளை (டிசம்பர் 2) பதவியேற்கவுள்ளனர். இந்நிலையில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறும் விதமாக நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில்,"தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட முடக்கத்திற்குப் பின் தேர்தல் நடைபெற்றதை வரவேற்கிறேன். தயாரிப்பாளர்கள் இணைந்து வாக்களித்ததில் மகிழ்ச்சி. எப்போதும் நம்மை நாம் ஆள்வது அவசியம். அப்போதுதான் உள்ளவர்களின் தேவையை உணர்ந்து பணியாற்ற முடியும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தைப் பொறுத்த வரை நிறைய சவால்கள் முன் நிற்கின்றன. இடைப்பட்ட காலங்களில் முடங்கிப்போன நிர்வாகம் சீரமைக்கப் பட்டு முடுக்கி விடப்பட வேண்டும். எனவே, தேர்தலில் வெற்றி பெற்ற குழு பணியாற்றக் கூடாது. தீவிரச் செயலாற்ற வேண்டும். முரளி ராம நாராயணனின் தலைமைக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்ற அனைத்துத் தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். என்ன வாக்குறுதிகள் சொல்லி…
Read More
VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓய்வில்லை – ராதாகிருஷ்ணன்!

VPF கட்டணத்தை ரத்து செய்யும் வரை ஓய்வில்லை – ராதாகிருஷ்ணன்!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி டி.ராஜேந்தர் தலைமையில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணியும்போட்டியிடுகின்றன. இவ்விரண்டு அணிகளைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி என நான்கு அணிகள் போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்" தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணிக்கும்-தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணிக்கு இடையில் மட்டுமே போட்டி என்கிற சூழல் நிலவி வருகிறது. ஒரு வார காலமே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது நேற்றைய (11.11.2020) அன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த T.  ராஜேந்தர் அரசியல் கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றுவது போல் பேசினார். செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பொறுப்பாக பதில் கூறுவதை தவிர்த்து வழக்கமான எதுகை மோனை வார்த்தை ஜாலங்களை கையாண்டார்.  VPF க்கு எதிராக முதல் குரல் கொடுத்தது நான் தான்…
Read More
தயாரிப்பாளர்கள் சங்கம் பலப்படுத்தப்படும்: நிரந்தர வருவாய் உருவாக்கப்படும் – ராமசாமி முரளி!

தயாரிப்பாளர்கள் சங்கம் பலப்படுத்தப்படும்: நிரந்தர வருவாய் உருவாக்கப்படும் – ராமசாமி முரளி!

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நவம்பர் 22 ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில், தேனாண்டாள் ராமசாமிமுரளி தலைமையில் ஒரு அணியும் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிடுகின்றன. இவ்விரண்டைத் தவிர சுயேச்சையாக தலைவர் பதவிக்கு P.L.தேனப்பன், செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு ஓயாத அலைகள் அணி, முன்னேற்ற அணி சார்பில் பலர்போட்டியிட்டாலும் தேர்தல் களத்தில்” தயாரிப்பாளர்கள் நலம் காக்கும் அணி” மட்டுமே தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. .இந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தேனாண்டாள் ராமசாமி என்கிற முரளியுடன்தேர்தல்கள நிலவரம் பற்றி ஒரு நேர்காணல். என்னென்ன வாக்குறுதிகளை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகிறீர்கள்.? தமிழ்த்திரையுலகில் இப்போதைய முக்கிய சிக்கலாக இருப்பதுVPF கட்டணம். அதைக் கட்ட மாட்டோம் என்றும் அதற்குரிய மாற்று ஏற்பாடுகளைசெய்வதற்கான முயற்சியை எங்கள் அணி வெற்றி பெற்றால் செய்வோம். நவீன தொழில் நுட்பங்கள் காரணமாக தமிழ்த் திரையுலகம் சந்திக்கும் சிக்கல்களை சரி செய்து அனைவருக்கும் சம…
Read More
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்!

தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பி.எல்.தேனப்பன் விலகல்!

கோலிவுட்டின்  தலைமை செயலகமான  தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பிரபல தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் விலகியுள்ளார். இது தொடர்பாக  அவர் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷாலுக்கு எழுதிய கடிதத்தில், விஷால் தலைமையிலான நிர்வாகிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுக்களையும் கண்டனங்களையும் தெரிவித்திருக்கிறார். தேனப்பன் எழுதியுள்ள ராஜினாமா கடிதம் இதோ : “நான் இதுவரை தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராக ஒரு முறையும், துணைத் தலைவராக ஒரு முறையும், பல முறை செயற்குழு உறுப்பினராகவும்  பணியாற்றியுள்ளேன். இப்பொழுது இருக்கும் நிர்வாகத்தில் எதிர்க்கட்சி அணியிலிருந்து செயற்குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெகு சில உறுப்பினர்களில் நானும் ஒருவன். இதுவரை என்னால் முடிந்த அளவிற்கு இந்த நிர்வாகத்திற்கு என்னுடைய ஒத்துழைப்பை அளிக்கத் தவறியதில்லை. இப்போது நான் தற்போதைய நிர்வாகத்தின் கீழ் செயற்குழு உறுப்பினராகத் தொடர விரும்பாததால் அப்பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளேன். என் ராஜினாமா முடிவுக்கான காரணங்களை கீழே குறிப்பிட்டுள்ளேன் : 1. முதலில் தி.நகா் அலுவலகம் தனியாக…
Read More