21
Jul
நேச்சுரல் ஸ்டார் நானி, விவேக் ஆத்ரேயா, டி.வி.வி என்டர்டெயின்மென்ட் இணையும் பான் இந்தியா திரைப்படம், “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்திலிருந்து, SJ சூர்யாவின் பிறந்தாள் கொண்டாட்டமாக அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோ வெளியாகியுள்ளது !! நேச்சுரல் ஸ்டார் நானி, “சூர்யா’ஸ் சாட்டர்டே” படத்தின் புரமோசன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. போஸ்டர்கள் முதல் வீடியோ, பாடல்கள் வரை, திரைப்படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் தொடர்ந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இன்று, எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக, ஒரு அசத்தலான கிளிம்ப்ஸே வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். வாய்ஸ் ஓவரில் தீமையின் சக்தி வலுவடையும்போதெல்லாம், அதைத் தடுக்க அதற்குச் சமமான அல்லது அதைவிட சக்தி வாய்ந்த நல்ல சக்தி உண்டாகும் எனும் ஒரு புதிரான குறிப்புடன் இந்த வீடியோ தொடங்குகிறது. இந்த வீடியோவில் SJ சூர்யா ஒரு அதிரடியான காவலராக அறிமுகப்படுத்தப்படுகிறார், அவர் அதிகாரமற்ற மக்கள் மீது தனது மேலாதிக்கத்தைக் காட்டுகிறார். இந்த கதையில் நமது பகவான்…