ஹிருதயம் மலையாள படம் எப்படி இருக்கிறது ?

ஹிருதயம் மலையாள படம் எப்படி இருக்கிறது ?

வினித் சீனிவாசனின் ஹிருதயம் ஒரு அட்டகாசமான காலேஜ் சினிமா ! ஒரு இளைஞனின் வாழ்வில் காலேஜ் முதல் வருடம் முதல், அவன் கல்யாணம் ஆகி செட்டில் ஆவது வரையிலான 10 வருட கால பயணம் தான் இந்தப்படம். ஈசிஆரில் இருக்கும் ஒரு கல்லூரியில் நிறைய மலையாளிகள் படிக்கிறார்கள் அப்படி 2010 காலகட்டத்தில் படிக்க வரும் பிரனவ் உடைய வாழ்வு தான் கதை ஒரு காலேஜ் ஃலைப்பில் என்ன நடக்கும் ராக்கிங், படிப்பு, நண்பர்கள், சண்டை, குடி, ஊர் சுற்றல், நண்பன் மரணம், காதல், காதல் தோல்வி, என வாழ்வின் தருணங்கள் அத்தனையும் படத்தில் அப்படியே வந்து போகிறது. எந்த பரபரப்பும் இல்லாத திரைக்கதை ஆனால் நம் கல்லூரி வாழ்வை, நாம் எப்படி நம் வாழ்வை கடந்து வந்தோம் என்பதை, அப்படியே கண்முன் கடை விரிக்கிறது. எப்படி இதையெல்லாம் திரைக்கதையாய் யோசிக்கிறார்கள் என, மலையாள சினிமா மீண்டும் மீண்டும் ஆச்சர்யப்படுத்தி கொண்டே இருக்கிறது.…
Read More