சலார் தெறிக்கும் இரத்த ஆறு !!

சலார் தெறிக்கும் இரத்த ஆறு !!

  கேஜிஎஃப் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் பிரசாந்த் இயக்கத்தில் நீல் பாகுபலி பிரபாஸ் நடித்திருக்கும் படம். பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வந்திருக்கிறது. நாயக பிம்பத்தை தூக்கிப்பிடிக்கும் வன்முறை மிகுந்த உலகத்திற்குள், அரச நாற்காலிக்கு நடக்கும் போராட்டன் தான் கதை.   பாகுபலிக்கு பிறகு பிரபாஸுக்கும் அவரது ரசிகர்களுக்கும் வலுவான ஆக்சன் விருந்தாக அமைந்துள்ளது சலார் வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருகிறார் ஆத்யா (ஸ்ருதி ஹாசன்). விமான நிலையத்தில் இறங்கியவுடன் அவரைக் கொல்வதற்கு ஒரு கும்பல் அவரைப் பின்தொடர்கிறது. அந்த கும்பலிடம் இருந்து யாரும் அவரைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், தேவா (பிரபாஸ்) மட்டுமே அவருக்கு உதவ முடியும் என்ற சூழ்நிலை உருவாகிறது. ஆனால் அந்த தேவா அசாமில் உள்ள டின் சுகியா எனும் தொலைதூர கிராமத்தில் தனது தாயுடன் (ஈஸ்வரி ராவ்) அமைதியாக வசித்து வருகிறார். அதைக் கண்டும் காணாதது போலச் சென்று விடுவார். தன் தாய்க்குச் செய்து கொடுத்த சத்தியத்திற்காக எல்லா…
Read More
பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

பிரபாஸின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள் ! திருவிழா போல காட்சியளிக்கிறது!

  தென்னிந்திய திரையுலகின் டார்லிங் பிரபாஸ் பாகுபலி மூலம் பான் இந்திய அளவில் பிரபலமானார். தற்போதைக்கு இந்திய திரையுலகில் மிகபபெரும் ரசிகர் பட்டாளம் அவருக்கு இருக்கிறது என்றால் அது மிகையில்லை. அவரது திரைப்படங்கள் வெளியீட்டுக்கு முன்னதாகவே சாதனைகள் படைக்கிறது. இந்திய முழுமைக்கும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் பிரபாஸின் பிறந்த நாளை நேற்று ரசிகர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளனர். தென்னிந்திய ரிபெல் ஸ்டார் பிரபாஸ் நேற்று 23 அக்டோபர் அவரது 44 பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி நேற்று ஹைதராபாத்தில் ஆயிரக்கணக்கில் கூடிய அவரது ரசிகர்கள், இந்திய திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் பிரம்மாண்டமான கட் அவுட் அமைத்து, கிரேனில் அதற்கு மாலை அணிவித்து, பாலபிஷேகம் செய்து, இனிப்பு விநியோகித்து கொண்டாடினார்கள். எந்த ஒரு நடிகருக்கும் இல்லாத வகையில் வெகு பிரம்மாண்டமாக, பெரும் கொண்டாட்டமாக நடந்த இந்த நிகழ்வு, பார்வையாளர்களுக்கு கண்கொள்ளாக் காட்சியாக, அமைந்தது
Read More
‘கண்ணப்பா’ படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் பிரபாஸ் !

‘கண்ணப்பா’ படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் பிரபாஸ் !

  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சுவின் நீண்டநாள் கனவான ‘கண்ணப்பா - ஒரு உண்மையான இந்திய காவியக் கதை’ திரைப்படத்தின் துவக்க விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக நடைபெற்றது. இதற்கிடையே, ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் முக்கிய வேடம் ஒன்றில் பிரபாஸ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. ஆனால், இது குறித்து பிரபாஸ் தரப்பில் இருந்தோ, விஷ்ணு மஞ்சு தரப்பில் இருந்தோ எந்த வித விளக்கமும் அளிக்காமல் இருந்தனர். இந்த நிலையில், நீண்ட நாட்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த இந்த தகவல் குறித்து நடிகர் விஷ்ணு மஞ்சு விளக்கம் அளித்துள்ளார். அதாவது, ‘கண்ணப்பா’ திரைப்படத்தில் பிரபாஸ் நடிப்பது உண்மை தான் என்று அவர் தெரிவித்துள்ளார். முக்கியமான வேடம் ஒன்றி பிரபாஸ் நடிப்பதாக தெரிவித்துள்ள விஷ்ணு மஞ்சு, அவரது கதாபாத்திரம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More
பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனின் ப்ராஜெக்ட் கே லுக் அதிகாரப்பூர்வ வெளியானது!

பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டார் தீபிகா படுகோனின் ப்ராஜெக்ட் கே லுக் அதிகாரப்பூர்வ வெளியானது!

  வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவுகதை படைப்பான ப்ராஜெக்ட் கே எனும் திரைப்படத்திலிருந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகை தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் பொருத்தமான காரணங்களுக்காக பெரும் சலசலப்பை உருவாக்கி, இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட இந்திய படமாக இந்த திரைப்படம் மாற்றம் பெற்றிருக்கிறது. சான் டியாகோ காமிக்-கானில் உள்ள ஐகானிக் ஹெச் ஹாலில் பிரம்மாண்டமாக அறிமுகமாகவிருக்கிறது 'ப்ராஜெக்ட் கே'. அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பன்மொழி திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற வாக்குறுதியால் பெரும் கவனத்தை கவர்ந்திருக்கிறது. ப்ராஜெக்ட் கே படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கில் தீபிகா படுகோனின் தோற்றம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செஃபியா டோன் எனும் காட்சிப் பின்னணியில்…
Read More
சலார் படத்தின் டீசர் வெளியானது! நடிகர் பிரபாஸின் மற்றுமொரு பிரம்மாண்டம்!

சலார் படத்தின் டீசர் வெளியானது! நடிகர் பிரபாஸின் மற்றுமொரு பிரம்மாண்டம்!

நீண்ட காத்திருப்புக்குப் பின் பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கிய 'இந்தியன் ஃபிலிம்' சலார் பகுதி-1 :சீஸ் ஃபயர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இப்படத்தின் டீசர் அதிகாலை 5 12 மணிக்கு வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அறிவிப்பு வெளியிட்டதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை படக்குழுவினர் தூண்டினர். மேலும் அனைவரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் புகழ்பெற்ற இயக்குநரான பிரசாந்த் நீல் உருவாக்கிய பரந்த பிரபஞ்சத்தின் பரபரப்பான செயல்பாடுகளின் காட்சிகளை இந்த டீசர் வழங்குகிறது. முன்னணி கதாபாத்திரத்தின் சக்தி வாய்ந்த உரையாடல்களால் நிறைந்திருக்கும் இந்த டீசர்... அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள இந்திய திரைப்படம் என்ற சாதனைகளை முறியடிக்கும் வகையில் உள்ளது. இதுவே வெற்றிக்கான தொடக்கம் என்பதனையும் எடுத்துரைக்கிறது. மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்ற 'கே ஜி எஃப்' படத்திற்குப். பிறகு அதன் அதிரடி இயக்குநர் பிரசாந்த் நீலிடமிருந்து தயாராகி இருக்கும் மற்றொரு படைப்பு. எதிர்காலத்தில் பல அத்தியாயங்களை வழங்கி.. தனக்கென புதிய…
Read More
அதிகாலை வெளியாகவுள்ளது சலார் படத்தின் டீசர்! பிரபாஸுக்கு இதுவே முதல் முறை!

அதிகாலை வெளியாகவுள்ளது சலார் படத்தின் டீசர்! பிரபாஸுக்கு இதுவே முதல் முறை!

  இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீது ரசிகர்களிடம் வானளாவிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியப் படங்களில் ஒன்றாக “சலார்” படம் இருக்கிறது. இந்த மெகா பட்ஜெட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டீசர் தேதி ஜூலை 6 ஆம் தேதி, காலை 5:12 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் சலார். கேஜிஎஃப் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் பாகுபலி மூலம் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக உருவெடுத்திருக்கும் பிரபாஸ் ஆகியோர் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, Hombale Films நிறுவனம்,…
Read More
ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை!

ப்ராஜெக்ட் கே படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கை!

நடிகர் கமல்ஹாசன் பிரபாஸுக்கு வில்லனாக நடிக்கின்றார் என்றும், ப்ராஜெக்ட் கே என்ற பான் இந்திய படத்தில் நடிப்பதற்காக கமலுக்கு 120 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் பேச்சுக்கள் போய்க்கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இணைந்ததை பற்றி உலகநாயகன் கமல்ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், நான் ஒரு நடிகன் என்பதையும் தாண்டி சினிமாவின் தீவிர ரசிகனாவேன். எந்த ஒரு புதுமையான விஷயங்களை பாராட்டும் ரசிகனான எனக்கு ப்ராஜெக்ட் கே படத்தில் இயக்குனர் நாக் அஸ்வின் எடுத்துள்ள கதைக்களத்தை கேட்டுவிட்டு ஒரு ரசிகனாக ரசித்தேன். அதைப்போல சினிமா ரசிகர்கள் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகின்றேன். மேலும் அமிதாப் பச்சனுடன் நான் ஏற்கனவே பணியாற்றியுள்ளேன் என்றாலும் தற்போது மீண்டும் இணைந்து நடிக்க ஆர்வமாக இருக்கின்றேன் என்று சொல்லி இருக்கார் கமல். உலகநாயகன் இப்படத்தை பாராட்டி பேசியுள்ளதால் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுது.
Read More
ஒரே சமயத்தில் வெளியாகவுள்ள இரண்டு கமல் படங்கள்! ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்து!

ஒரே சமயத்தில் வெளியாகவுள்ள இரண்டு கமல் படங்கள்! ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்து!

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில். தற்போது இந்தியன் 2 திரைப்படம் அடுத்தாண்டு துவக்கத்தில் தான் வெளியாகும் என அறிவிப்புகள் வருகின்றன. தற்போது இந்தியன் 2 திரைப்படம் சென்னை ஏர்போட்டில் நடைபெற்று வருகின்றது. இதையடுத்து விறுவிறுப்பாக மீதமுள்ள காட்சிகளை படமாக்கிவிட்டு அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. பொங்கலுக்கு இந்தியன் 2 திரைப்படம் வெளியானால் ஒரே தினத்தில் கமல் நடித்த இரண்டு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. அதாவது பிரபாஸின் நடிப்பில் உருவாகி வரும் ப்ராஜெக்ட் K படத்தில் உலகநாயகன் கமல் வில்லனாக நடிப்பதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதில் நடிக்க கமலுக்கு 150 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றது. மேலும் இப்படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதால் இப்படமும் இந்தியன் 2…
Read More
நடிகர் பிரபாஸின் ஹாட்ரிக் வசூல் சாதனை! விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படி ஒர் சாதனை!

நடிகர் பிரபாஸின் ஹாட்ரிக் வசூல் சாதனை! விமர்சனங்களுக்கு மத்தியிலும் இப்படி ஒர் சாதனை!

  பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படம், வெளியான மூன்று நாட்களில் 340 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனையை படைத்திருக்கிறது. இதன் மூலம் நடிகர் பிரபாஸ் வசூலில் புதிய சாதனையை படைத்து பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கிறார். டீ சிரீஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸ் ராஜேஷ் நாயர் ஆகியோர் தயாரிப்பில், பாலிவுட் இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி வெளியான திரைப்படம் 'ஆதி புருஷ்'. இதில் பான் இந்திய நட்சத்திர நடிகர் பிரபாஸ், நூபுர் சனோன், சயீப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூலில் சாதனை படைத்து வருகிறது. வெளியான மூன்று தினங்களில் உலகம் முழுவதும் 340 கோடி ரூபாயை வசூலித்து…
Read More
‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் இந்த இடத்திலா நடந்தது!

‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் இந்த இடத்திலா நடந்தது!

  நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. 'ஆதி புருஷ்'…
Read More