25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன்- ராதே ஷியாம் விழாவில் சத்யராஜ்

25 ஹீரோயினை கல்யாணம் செய்திருக்கிறேன்- ராதே ஷியாம் விழாவில் சத்யராஜ்

ராதே ஷியாம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு! UV கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள ராதே ஷியாம். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ள பிரமாண்டமான படங்களில் ஒன்று ராதே ஷ்யாம், UV கிரியேஷன்ஸ் பேனரில் வம்சி மற்றும் பிரமோத் தயாரிப்பில், ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில், பிரபாஸ்-பூஜா ஹெக்டே நடித்துள்ள இப்படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில், தமிழ் பதிப்பிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவினில் நடிகர் சத்யராஜ், சிபிராஜ், உதயநிதி, தயாரிப்பாளர் செண்பகமூர்த்தி, உட்பட்ட தமிழ் பிரபலங்களுடன், ராதே ஷியாம் படக்குழுவினர் பிரபாஸ், பூஜா ஹெக்டே, இயக்குநர் ராதா கிருஷ்ண குமார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, பாடலாசிரியர் மதன் கார்கி தயாரிப்பாளர் பிரமோத் ஆகியோர் கலந்துகொண்டனர். பாடலாசிரியர் மதன் கார்கி பேசியதாவது… மூணு வருடங்களுக்கு முன்பு இயக்குநர்…
Read More
பிரபாஸிற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல்

பிரபாஸிற்காக யுவன் சங்கர் ராஜா பாடிய பாடல்

இதயம் தொடும் பாடலை வெளியிட்ட பிரபாஸின் அகில இந்திய திரைப்படமான ராதே ஷியாம் குழுவினர், ஜஸ்டின் பிரபாகரன் இசையில் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார் யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் திரைப்படத்திலிருந்து இதயத்தை தொடும் பாடல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இப்பாடலுக்கு ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார். அதே பொருள் தரும் வரிகள், ஆனால் முற்றிலும் வித்தியாசமான இசையில் உருவாகியுள்ள இதன் இந்தி பதிப்பு விரைவில் வெளியாகும். படம் குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முப்பரிமாண காணொளியாக இன்று வெளியிடப்பட்டுள்ள பாடல் ஒரு முன்மாதிரி முயற்சியாக அமைந்துள்ளது. உள்ளார்ந்த அர்த்தங்களை கொண்டுள்ள இந்த பாடல் இரண்டு முக்கிய பரிமாணங்களை கொண்டுள்ளது. காணொளியில் ஒன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், இன்னொன்று…
Read More
வெளியானது ராதே ஷியாம் டீசர்!

வெளியானது ராதே ஷியாம் டீசர்!

*யூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் டீசர் ரிலீஸ்: வெளியானது விக்ரம் ஆதித்யா ரகசியங்கள்* நடிகர் பிரபாஸின் பிறந்த நாளான இன்று, அவரது அடுத்த படமான யூவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் ராதா கிருஷ்ணகுமார் இயக்கும் ராதே ஷியாமின் டீசர் வெளியிடப் பட்டுள்ளது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரம் ஆதித்யா குறித்த சிறப்பு டீசராக இது அமைந்துள்ளது. ராதே ஷியாம் திரைப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை இதுவரை உருவாக்கியிருந்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாள் பரிசாக இன்று வெளியிடப்பட்டுள்ள டீசர் அவர்களை பரவசத்தில் ஆழ்த்துகிறது. விடுகதை பாணியில் அமைந்துள்ள இந்த டீசர், பிரபாஸ் ஏற்றுள்ள கதாபாத்திரமான கைரேகை நிபுணர் குறித்த ரகசியங்களை தனக்கே உரிய பாணியில் விறுவிறுப்பான முறையில் வெளியிடுகிறது. முதல் முறையாக இத்தகைய வேடத்தில் பிரபாஸ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் பிரத்யேகமானது என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.…
Read More
பிரபாஸின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது

பிரபாஸின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகியுள்ளது

  டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட் உடைய பிரமாண்ட தயாரிப்பில், நடிகர் பிரபாஸின் 25-வது படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘ஸ்பிரிட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அர்ஜுன் ரெட்டி’ மற்றும் ‘கபிர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சந்தீப், பிரபாஸ் நடிக்கும் அகில இந்திய திரைப்படமான ஸ்பிரிட்டுக்காக முன்னெப்போதும் திரையில் வந்திராத கதைக்களம் ஒன்றை தேர்ந்தெடுத்துள்ளார். ‘சலார்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ படங்களில் தற்போது நடித்து வரும் பிரபாஸ், ‘புரோஜெக்ட் கே’ எனும் திரைப்படத்திலும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அவரது 25-வது படமான ‘ஸ்பிரிட்’ படப்படிப்பு அடுத்த வருடம் தொடங்கவுள்ளது. ‘சாஹோ’, ‘ராதே ஷியாம்’ மற்றும் ‘ஆதி புருஷ்’ ஆகிய படங்களுக்காக பிராபஸுடன் கைகோர்த்த டி சீரிஸ் என்டெர்டெயின்மென்ட், யுவி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘ஸ்பிரிட்’ திரைப்படத்தை பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இயக்கம்: சந்தீப் ரெட்டி வங்கா
Read More
டார்லிங் பிரபாஸ் – கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இணையும் ‘சலார்’….!

டார்லிங் பிரபாஸ் – கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இணையும் ‘சலார்’….!

இந்திய அளவில் 'கே.ஜி.எஃப்' படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் பிரபலமடைந்த தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ். வித்தியாசமான களங்கள், பிரம் மாண்டமான படைப்புகள் என தொடர்ச்சியாக வெற்றிகரமாகப் பயணித்து வருகிறது. தற்போது 'யுவரத்னா' மற்றும் 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வருகிறது. ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகண்தூர் தங்களது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அறிவித்துள்ளார். இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான 'டார்லிங்' பிரபாஸ் நாயகனாக நடிக்கவுள்ள இப்படத்தை 'கே.ஜி.எஃப்' படங்களின் மூலம் நம்மை அசரவைத்த இயக்குநர் பிரஷான்த் நீல் இயக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது. தற்போது 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்து விட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார். இந்தப் பிரம்மாண்ட தயாரிப்பு குறித்து தயாரிப்பாளர் விஜய் கிரகண்தூர் கூறுகையில் "ஆம்! அது உண்மைதான்!! 'டார்லிங்' பிரபாஸ் மற்றும் பிரஷான்த் நீல் இருவரையும் இந்த மிகப்பெரிய படத்தில்…
Read More
‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனத்தின் பாய்ச்சலைப் பார்க்கத் தயாரா?

‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனத்தின் பாய்ச்சலைப் பார்க்கத் தயாரா?

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. 'கே.ஜி.எஃப் சேப்டர் 1' (KGF : Chapter 1') படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films). கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) நடித்த 'நின்னிந்தலே' (Ninnindale), 'ராஜ்குமாரா' (Raajakumara) மற்றும் யஷ் (Yash) நடித்த 'மாஸ்டர் பீஸ்' (Masterpiece) உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films). இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது 'ராஜ்குமாரா' (Raajakumara) திரைப்படம். இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் தன்னுடைய நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்தார் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனர் விஜய் கிரகண்தூர் ( Vijay Kiragandur) இதற்காக ஹொம்பாளே பிலிம்ஸ்…
Read More
அனுஷ்காவுடன் கல்யாணமா? பிரபாஸ் பதில்!

அனுஷ்காவுடன் கல்யாணமா? பிரபாஸ் பதில்!

நடிகை அனுஷ்காவுடன் காதல் என்ற தகவல் வெறும் வதந்தி. அதில் உண்மை இல்லை. தற் போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை’ என்று நடிகர் பிரபாஸ் கூறியுள்ளார்.  பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு, வெளிநாடுகளிலும் பிரபலமாகி விட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிவரும் ‘சாஹோ’ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதற்கிடையில், இவரது திருமணம் குறித்து பல வதந்திகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகை அனுஷ்காவுடன் காதல் என்றும், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. அவர்கள் இருவரும் இத்தகவல்களை மறுக்காததால், ஒருவேளை உண்மையாக இருக்கு மோ என்ற சந்தேகமும் இருந்தது. இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித் துள்ள பிரபாஸ், தனது திருமணம் குறித்து முதன்முறையாக பேசியுள்ளார். அப்போது அவர் கூறியது, “தற்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இதனால்…
Read More
பாகுபலியின் சாதனைக்கு நன்றி – பிரபாஸ்  நெகிழ்ச்சி!

பாகுபலியின் சாதனைக்கு நன்றி – பிரபாஸ் நெகிழ்ச்சி!

ராஜமெளலி இயக்கத்தில் வெளியான 'பாகுபலி 2' திரைப்படம் தமிழகத்தில் தற்போது பல்வேறு திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது. 75 நாட்களைக் கடந்துவிட்டாலும், தற்போது வெளியாகும் சில புதிய படங்களூக்கு நிகராக கூட்டமிருப்பதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தார்கள். தமிழக விநியோகத்தில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் வியாபார சாதனைகளையும் முறியடித்ததுள்ளது. இனிமேல் வெளியாகவுள்ள படங்கள், 'பாகுபலி 2' செய்துள்ள சாதனையை முறியடிப்பது மிகவும் கடினம் என்று விநியோகஸ்தர்கள் குறிப்பிட்டார்கள். இதனிடையே பாகுபலி நாயகன் பிரபாஸ் அனுப்பிய ஓர் அறிக்கையில், “இன்றோடு பாகுபலி-1 திரையிடப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைகிறது. என் வாழ்வின் பொன்னான, மிக சிறந்த அந்த நாளின் நினைவுகளை ஆழமான நன்றியோடு நினைவு கூறுகிறேன். பாகுபலி குழுவினர் அனைவரும் ஒருமித்த எண்ணத்துடனும் மிகப் பெரிய ஆர்வத்துடனும், ஒற்றுமையாக பணியாற்றிய அந்த நாட்களின் நினைவுகள் என்னை சிலிர்ப்போடுத் திரும்பிப் பார்க்க வைக்கின்றன.  என்னை இவ்வளவு பெரிய உயரத்தில் வைத்து அழகு பார்க்கும் ரசிகர்களுக்கும், நான்…
Read More
‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது! – ராஜமெளலி பேட்டி

‘பாகுபலி’ கதையை ஒட்டி நிறைய கதைகள் இருக்கிறது! – ராஜமெளலி பேட்டி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி வெளியாகவுள்ள ‘பாகுபலி-2’ படத்தின் இசை வெளியீடு இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்னதாக, படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வில், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், ராஜமௌலி பேசும்போது, ‘பாகுபலி’ படம் பெரிய ஹிட்டாகவேண்டும் என்று நினைத்துதான் படத்தை எடுத்தோம். ஆனால் இவ்வளவு பெரிய ஹிட்டாகும் என்று நினைக்கவில்லை. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வரலாற்று படம் செய்ய வேண்டும் என்று தான் தொடங்கினோம். முதல் பாகம் தமிழில் பெரும் வெற்றி பெற்றது, அதற்கு எப்படி நன்றி சொல்வது என தெரியவில்லை. இது ஒரு கற்பனை கலந்த வரலாற்று படம். ஆகையால் இந்த காலத்தில் தான் இக்கதை நடைபெற்றது என்று சொல்ல முடியாது. கதையை 1000 வருடங்களுக்கு முன்பு நடப்பது போல வைத்துக் கொண்டோம். 'பாகுபலி' கதையைத் தொடங்கும் போது…
Read More