திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்

  நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர். சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. 'ஆதி புருஷ்'…
Read More
ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் “ஆதிபுருஷ்” படக்குழு அறிவிப்பு

ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் “ஆதிபுருஷ்” படக்குழு அறிவிப்பு

மாபெரும் இதிகாசங்களில் ஒன்று ராமாயணம், அந்த கதையை மையமாக வைத்து தயாராகியுள்ள படம் "ஆதிபுருஷ்". இதை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார், இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சைப் அலி கான், சீதையாக கீர்த்தி சனோன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 16ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.மேலும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. "ஆதிபுருஷ்" படத்தின் டிரைலர் வெளிவந்த போது அனைத்து மொழிகளையும் சேர்த்தி 6 கோடிக்கு மேல் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளிவரும் போது ஒவ்வொரு காட்சிகளிலும் ஒரு இருக்கை காலியாக விட வேண்டும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ள படக்குழு "அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் விசுவாசத்தின் உருவமான அனுமனுக்கு மிகுந்த மரியாதை உடன் கூடிய பணிவான அஞ்சலி".இப்படத்தை ஒரு காலி இருக்கையுடன்…
Read More
நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்கவுள்ள கமலுக்கு இவ்வளவு சம்பளமா!!

நடிகர் பிரபாஸ் படத்தில் நடிக்கவுள்ள கமலுக்கு இவ்வளவு சம்பளமா!!

நடிகர் பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே என்ற படத்தில் நடித்து வருகிறார். மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்த படத்தில் தீபிகா படுகோன் ஹீரோயினாக நடிக்கிறார். நாக் அஸ்வின் இயக்கும் இந்த படம் ஹாலிவுட் தரத்திற்கு மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பிரம்மாண்ட படத்தில் வில்லனாக நடிக்கும் கமல்! மிரள வைக்கும் சம்பளம்.. 20 நாளுக்கு இத்தனை கோடியா Project K படத்தில் நடிப்பதற்காக கமல்ஹாசனுக்கு 150 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு இருக்கிறதாம். அவர் வெறும் 20 நாள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வந்திருக்கிறது. கமல்ஹாசனை முழுக்க முழுக்க வில்லனாக பார்க்கலாம் என்பதால் தற்போது ரசிகர்கள் இந்த தகவலால் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
Read More
ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது ‘ஆதி புருஷ்’ படத்தின் இரண்டாவது பாடல்

  ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' எனும் திரைப்படம், மீண்டும் புதிய சரித்திரத்தைப் படைக்கத் தயாராகிறது. இந்த படத்தில் இடம்பெறும் 'ராம் சியா ராம்..' என தொடங்கும் இரண்டாவது பாடல், மே 29ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே தருணத்தில் வெளியாகும் என்று படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது இசையமைப்பாளர்களான சாசெட்- பரம்பரா ஆகியோரின் இசையமைப்பில் பாடலாசிரியரும், கவிஞருமான மனோஜ் முன்டாஷீர் எழுதிய இந்த பாடல், எல்லைகளைக் கடந்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களைக் கவரும். திரைத்துறை சேனல்கள், இசை சேனல்கள் , ஏனைய பொழுதுபோக்கு சேனல்கள்.. இதைத் தவிர்த்து இந்தியா முழுவதும் எழுபதிற்கும் மேற்பட்ட முன்னணி பண்பலை வானொலி நிலையங்கள், தேசிய செய்தி சேனல்கள், திறந்த வெளி விளம்பர பலகைகள், இசையை ஸ்ட்ரீமிங் செய்யும் டிஜிட்டல் தளங்கள், டிக்கெட் பார்ட்னர்கள், திரையரங்குகள், வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் என அனைத்து முக்கிய…
Read More
ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடல்

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடல்

ஆதிபுருஷ் திரைப்பட குழுவினர் வெளியிட்டுள்ள ஜெய் ஸ்ரீ ராம் என்ற பாடலின் வழியே பிரபு ஸ்ரீராமின் தெய்வீகப் பேரொளியை அனுபவித்து மகிழவும் !!! "ஆதிபுருஷ்" படத்தில் இடம் பெற்றிருக்கும் 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் நம் தேசத்தை மட்டுமின்றி உலகையே ஈர்த்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டீசர் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் படத்தினை காண ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பாளரான அஜய்-அதுல் இசையமைத்து, மனோஜ் முன்டாஷிரின் சக்திவாய்ந்த வரிகளைக் கொண்ட இந்த அசாதாரண பாடல் பிரபு ஸ்ரீராமின் வலிமை மற்றும் சக்தியை குறிக்கும் ஒரு அற்புத அடையாளமாக அமைந்துள்ளது. கண் கவரும் காட்சிகள் மூலம் மட்டுமல்லாமல், இரட்டை இசையமைப்பாளர்களான அஜய்-அதுல் மற்றும் 30+ பாடகர்கள் பங்கு கொண்டு பாடலை நிகழ்த்தியுள்ளார்கள். நாசிக் மேளமும் 'ஜெய் ஸ்ரீ ராம்' கோஷமும் இணைந்து அதி அற்புதமான முறையில் உருவாக்கப்பட்ட பாடல், மயக்கும்…
Read More
பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

பிரபாஸ் நடிக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

உலகின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. காவிய படைப்பான 'ஆதி புருஷ்' படத்தின் முன்னோட்டம் பார்வையாளர்களை விசேஷமான உலகத்திற்கு அழைத்துச் செல்கிறது. இப்படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கிறது. 'ஆதி புருஷ்' படத்தில் பான் இந்திய நட்சத்திர நாயகனான பிரபாஸ், சயீப் அலி கான், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். காவிய படைப்பான 'ஆதி புருஷ்' படத்தை ஓம்ராவத் இயக்கியிருக்கிறார். இதனை டிசீரிஸ் பூஷன் குமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பிரம்மாண்டத்தையும் மகத்துவத்தையும் பொருத்து முன்னோட்ட வெளியீட்டு விழா கொண்டாட்டங்கள் இரண்டு நாட்கள் நீடித்தது. இந்த முன்னோட்டம் முதலில் ஹைதராபாத்தில் பான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து மும்பையில் பிரம்மாண்டமான வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெற்றது. இதில் முன்னணி நட்சத்திர நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். 'ஆதி புருஷ்'…
Read More
என்னை நம்பியதற்கு நன்றி – பிரபாஸுக்கு பதிலளித்த ராஜமௌலி

என்னை நம்பியதற்கு நன்றி – பிரபாஸுக்கு பதிலளித்த ராஜமௌலி

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் பிரபாஸ். இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியுடன் இணைந்து பிரபாஸ் கொடுத்த பாகுபலி திரைப்படம் இந்திய திரையுலகில் புதிய சரித்திரம் படைத்தது. பிரபாஸின் நட்சத்திர அந்தஸ்து வானாளவு உயர்ந்தது. படத்திற்கு அவர் பெரும்பலமாக அமைந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் திரையில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டிய இந்த நடிகர்-இயக்குனர் கூட்டணி நட்புறவில் படத்தை தாண்டியும் அவ்வப்போது ரசிகர்களை தொடர்ந்து ஆச்சர்யப்படுத்தி வருகின்றனர். அதில் லேட்டஸ்ட்டாக நடிகர் பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலியை வாழ்த்திய இந்த சம்பவமும் இணைந்துள்ளது. சமீபத்தில் பாகுபலி இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதையும், LA பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் விருதுகளையும் வென்றார், இதற்காக மெகா ஸ்டார் பிரபாஸ் அவரை வாழ்த்தி இணையத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். - " @ssrajamouli அவர்கள் இந்த உலகையே வெல்லப் போகிறார். சிறந்த இயக்குனருக்கான நியூயார்க் பிலிம்ஸ் கிரிட்டிக்ஸ் சர்க்கிள் விருதை வென்றதற்கும், சிறந்த இயக்குனருக்கான LA பிலிம்ஸ்…
Read More

நடிகர் பிரபாஸ் திரையுலகில் அறிமுகமாகி 20 வருடங்கள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கு திரையுலகில் நடிகராக அறிமுகமாகி பல்வேறு படங்களில் நடித்து வெற்றி கண்டவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி என்ற படத்தின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமான இவர் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்ததாக ஆதிபுருஷ் திரைப்படம் மிக பிரம்மாண்டமாக திரைக்கு வர உள்ளது. பாகுபலி படத்திற்கு அடுத்ததாக இவரது ரசிகர் பட்டாளம் உலக அளவில் பறந்து விரிந்தது. தெலுங்கு திரை உலகை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகமும் பிரபாஸின் அடுத்தடுத்த படங்களுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் நடிகர் பிரபாஸ் திரையுலகில் அடி எடுத்து வைத்து இன்றோடு 20 வருடங்கள் ஆன நிலையில் ரசிகர்கள் அதனை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். பிரபாஸ் இன்னும் பல வெற்றிகளை பெற்று உச்சத்திற்கு செல்ல வேண்டும் என வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Read More
கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட போஸ்டர் !!

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் ‘ஆதி புருஷ்’ பட போஸ்டர் !!

  ‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்க படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர். ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபாஸ் - 'ஆதி புருஷ்' படக் குழு. நடிகர் பிரபாஸின் ராம அவதார உருவப்படம், தெய்வீகம் ததும்பும்…
Read More
ரசிகர்களுக்கு சுதந்திர தின பரிசை அளித்த ‘சலார்’ படக்குழு

ரசிகர்களுக்கு சுதந்திர தின பரிசை அளித்த ‘சலார்’ படக்குழு

'கே ஜி எஃப்' படத்தின் தயாரிப்பாளரும், பாகுபலி' படப் புகழ் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாசும் இணைந்து உருவாக்கி வரும் 'சலார்' படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்து, புதிய போஸ்டரையும் பட குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பான் இந்திய படைப்பு 'சலார்'. ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், 'கே ஜி எஃப்' பட புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பான் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' திரைப்படம் செப்டம்பர் 28, 2023 ஆம் ஆண்டில் வெளியாகவிருக்கிறது. முழு நீள ஆக்சன் படமான 'சலார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி, பெரும் தாக்கத்தையும், நேர்மறையான அதிர்வையும் ஏற்படுத்தி இருந்தது. 'சலார்' படத்தில் பிரபாஸின் கதாபாத்திர தோற்றப் புகைப்படத்தை காண்பதற்காக ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருந்தார்கள். ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் வகையில், இந்தியாவின் 75 ஆவது…
Read More