06
Aug
நடிகர்கள்: பிரபுதேவா, ரைசா வில்சன், வரலக்ஷ்மி சரத்குமார் இசை: இமான் இயக்கம்: சந்தோஷ் பி. ஜெயக்குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஹர ஹர மகாதேவகி, இரண்டா குத்து போன்ற ஏ சான்றிதழ் படங்களை இயக்கிய சந்தோஷ் பி. ஜெயக்குமார் கஜினிகாந்த் படத்துக்கு பிறகு மீண்டும் U சான்றிதழ் படமாக இயக்கி உள்ள இந்த பொய்கால் குதிரை எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். விபத்து ஒன்றில் மனைவியையும் தனது ஒரு காலையும் இழந்து விடுகிறார் நாயகன். ஒரு கால் இல்லாமல் தன் மகளை காப்பாற்ற வேண்டும் என வாழ்ந்து வரும் அவருக்கு, ஒரு நாள் திடீரென மகளுக்கு இதயத்தில் பிரச்சனை இருக்கிறது, அதை பல லட்சம் செலவு செய்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது தெரிய வருகிறது. பணத்திற்காக பணக்கார குடும்பத்தின் வாரிசை கடத்தி பணம் பரிக்க திட்டம் போடுகிறார். அந்த திட்டம் எப்படி பல சிக்கலுக்குள் சிக்குகிறது என்பதே…