வைல்ட் லைப் போட்டோகிராபர் கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “

வைல்ட் லைப் போட்டோகிராபர் கேரக்டரில் ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது “ பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள். பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது. அதை தொடர்ந்து இதே ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது. இன்று பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு அந்தமான், மேற்கு தொடர்ச்சி மலை, மூணார் ஆகிய காடுகளில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை…
Read More