19
Nov
ஆர்டிஎக்ஸ் 100’ படத்தில் அசத்திய பாயல் ராஜ்புத், அஜய் பூபதி கூட்டணி மீண்டும் ஒரு அட்டகாச திரில்லருடன் வந்திருக்கிறது. பட்டாம்பூச்சி படபடப்பு சிறகுகளாக விரியும் ஒரு பெண்ணின் காமம் எத்தனை பிரச்சனையாகிறது என்பதே படத்தின் மையம். ஒரு ஊரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கள்ள உறவு தம்பதிகள் சுவற்றில் எழுதி, கொல்லப்படுகிறார்கள். அது கொலையா தற்கொலையா என்றே முதலில் முடிவதாக நிலையில் ஊருக்கு புதுசாக வரும் பெண் போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கிறார். பின் தொடர் மரணங்கள் அதை கொலை என்பதை உறுதி செய்கிறது. ஊரில் சண்டைப்போட்டுக் கொள்ளும் இரு கோஷ்டியா? ஊர்ப்பண்ணையாரா? பூசாரியா என பலர் மீது சந்தேகம் இதையெல்லாம் செய்வது யார் இந்தக் கொலைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பது தான் கதை. போன காமத்திற்காக ஒரு ஆடவனைப் பயன்படுத்திக் கொள்ளும் பாத்திரத்தில் நடித்திருந்தார் பாயல் ராஜ்புத். வில்லத்தனமான அந்த பாத்திரத்தை ஏற்கப் பிற நாயகிகள் நிச்சயம் யோசித்திருப்பார்கள்.…