செவ்வாய்க்கிழமை திரைப்பட விமர்சனம்

 

ஆர்டிஎக்ஸ் 100’ படத்தில் அசத்திய பாயல் ராஜ்புத், அஜய் பூபதி கூட்டணி மீண்டும் ஒரு அட்டகாச திரில்லருடன் வந்திருக்கிறது.

பட்டாம்பூச்சி படபடப்பு சிறகுகளாக விரியும் ஒரு பெண்ணின் காமம் எத்தனை பிரச்சனையாகிறது என்பதே படத்தின் மையம்.

ஒரு ஊரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் கள்ள உறவு தம்பதிகள் சுவற்றில் எழுதி, கொல்லப்படுகிறார்கள். அது கொலையா தற்கொலையா என்றே முதலில் முடிவதாக நிலையில் ஊருக்கு புதுசாக வரும் பெண் போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கிறார். பின் தொடர் மரணங்கள் அதை கொலை என்பதை உறுதி செய்கிறது. ஊரில் சண்டைப்போட்டுக் கொள்ளும் இரு கோஷ்டியா? ஊர்ப்பண்ணையாரா? பூசாரியா என பலர் மீது சந்தேகம் இதையெல்லாம் செய்வது யார் இந்தக் கொலைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன என்பது தான் கதை.

Chevvaikizhamai (2023) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

போன காமத்திற்காக ஒரு ஆடவனைப் பயன்படுத்திக் கொள்ளும் பாத்திரத்தில் நடித்திருந்தார் பாயல் ராஜ்புத்.
வில்லத்தனமான அந்த பாத்திரத்தை ஏற்கப் பிற நாயகிகள் நிச்சயம் யோசித்திருப்பார்கள். இதிலும் அப்படியொரு வேடத்தில் அவர் அசத்தலாகத் தோன்றியுள்ளார்.

உண்மையில் இப்படி ஒரு கதாப்பாத்திரத்தை ஒரு நாயகி ஏற்று நடிப்பது மிக சவாலானது தான். ஆனால் அதை தன் நடிப்பால் மிரட்டி எல்லோரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளார்.

கதையின் மிகப்பெரும் பலம் நாம் எதிர்பாராத திருப்பங்கள் தான். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கு கதையில் ஒரு முடிச்சு அவிழ்கிறது படத்தின் க்ளைமாக்ஸ் வரையும் இது தொடர்வது படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது.

படத்தின் அடுத்த ப்ளஸ் தெலுங்கு வாடை வீசினாலும் நம்மை உண்மையில் ஒரு கிராமத்திற்குள் கூட்டிபோகிறார்கள், அந்த இடம் மனிதர்கள் பழக்க வழக்கம் எல்லாம் ஒரு கிராமத்தை அச்சு அசலாக பிரதிபலிக்க வைத்துள்ளார்கள்.

Sevvai Kizhamai Movie First Look
நந்திதா, அஜ்மல், சைதன்யா, ரவீந்திரா விஜய், திவ்யா பிள்ளை, சைதன்யா, ஸ்ரவன் ரெட்டி உட்படப் அத்தனை பேரும் மனதில் பதிகிறார்கள்.
’விசாரணை’யில் வில்லனாக மிரட்டிய அஜய் கோஷ், இதில் காமெடி வேடத்தில் தோன்றியுள்ளார். அவருடன் திரிபவராக, கண் பார்வை குறைபாடு உடையவராகத் தோன்றியிருப்பவரும் சிறப்பாக நடித்துள்ளார்.

இவர்கள் தவிர்த்து ஊர்க்காரர்கள் என்று சுமார் ஒன்றரை டஜன் பேருக்கு திரைக்கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அது தான் படத்தின் பலம்.

பின்னணி இசை தந்திருக்கும் அஜனீஷ் லோக்நாத், திரையில் ஒரு இசைக் கொண்டாட்டத்தையே நிகழ்த்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியும் கேமராவும் இசையும் ஒன்றாக மேஜிக் நிகழ்த்துகிறது.
’காந்தாரா’வின் இசையமைப்பாளர் இவரே என்று மக்களிடம் நினைவுபடுத்த முயன்றிருக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி.

ஒரு திரில்லர் கதை போல் இல்லாமல் ஒரு கிராமத்திற்குள் நம்மை கூட்டிச்சென்று நமக்கு ஒரு நல்ல அனுபவத்தை தந்து அனுப்பி வைக்கிறார் இயக்குனர் அஜய் பூபதி. கொஞ்சம் பிசகினாலும் இதில் சொல்லப்படும் காமம் அகோரமாகியிருக்கும் ஆனால் அதை கத்தி மேல் நடந்து கரக்டாக சொல்லி ஜெயித்துவட்டார் இயக்குநர்.

கண்டிப்பாக மிஸ் பண்ணக்கூடாத படம்.