அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான்!’லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடுவில் நடிகர் வித்தார்த்!

அனைவரும் விரும்பும் ஒரே முதலாளி இவர்தான்!’லாந்தர்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடுவில் நடிகர் வித்தார்த்!

'யதார்த்த நாயகன்' விதார்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. கமலா திரையரங்கில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் ரவிக்குமார், ஏ ஆர் கே சரவணன், கார்த்திகேயன், கனல் கண்ணன், தயாரிப்பாளர் - நடிகர் பி.எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். படத்தின் இசையை தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி முருகன் வெளியிட, சிறப்பு விருந்தினர்களும், படக் குழுவினரும் இணைந்து பெற்றுக் கொண்டனர். ஷாஜி சலீம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'லாந்தர்' திரைப்படத்தில் விதார்த், ஸ்வேதா டோரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஞான சௌந்தர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். பிரவீன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை கல்லை தேவா கவனித்திருக்கிறார். கிரைம் திரில்லர் வகையிலான இந்த திரைப்படத்தை…
Read More
தண்டட்டி திரை விமர்சனம்

தண்டட்டி திரை விமர்சனம்

  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிக்க, பசுபதி, ரோகினி, அம்மு அபிராமி, தீபா சங்கர், செம்மலர் அன்னம், விவேக் பிரசன்னா நடிப்பில் ராம் சங்கையா என்ற அறிமுக இயக்குனர் எழுதி இயக்கி உள்ள படம் தண்டட்டி. தண்டட்டி என்பது, கிரமாத்து வயதான பெண்கள், காது வளர்க்க அணியும் தங்க ஆபரணம். தற்போது வழக்கொழிந்து வரும் இந்த தண்டட்டியின் பின்னால் ஒரு அழகிய கதையை கிரமாத்து வாழ்வியலை கண்முன் கொண்டுவர முயற்சித்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் ஒய்வு பெற வேண்டிய வயதில், ஒரு குற்றவாளியைக் கடுமையாகத் தண்டித்த காரணத்தால்  மனித உரிமை அமைப்பின் விசாரணைக்கு ஆளாகி மாற்றல் வாங்கி புதிய பகுதிக்கு வந்திருக்கும் காவலர் (பசுபதி). அருகே இருக்கும் பிரச்சனைக்குரிய கிராமத்தில் யாருக்கு பிரச்சனை என்றாலும் போலீஸ் போகாது, ஆனால் அங்கே இருந்து தன் அம்மாவை காணவில்லை என மூன்று பெண்களும் பேரனும் வருகிறார்கள். இறந்து போன அவரை கண்டுபிடிக்கும்…
Read More
மம்முட்டி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் ரங்கன் வாத்தியார் பசுபதி!

மம்முட்டி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் ரங்கன் வாத்தியார் பசுபதி!

  பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி' . ஏ.வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கியுள்ளார்.கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர். குறிப்பாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த தண்டட்டி அணிந்த மூதாட்டிகள் பலர் இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.இந்தப்படத்திற்கு K.S. சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தின் படத்தொகுப்பை சிவா நந்தீஸ்வரன் மேற்கொண்டுள்ளார். கலையை வீரமணி கவனித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 23ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை தி.நகரில் நடைபெற்றது. இந்நிகழ்வில்   நடிகை அம்மு அபிராமி பேசியதாவது, "இந்த கதையை இயக்குநர் சொன்னாலும் நான்…
Read More