28
May
ஆதி ஆறுமுகம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பனை”. இந்த படத்தில் வடிவுக்கரசி, இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் வைரமுத்து, வணிகர் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, இயக்குநர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், இயக்குநர் பேரரசு பேசியதாவது , “இந்த நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்துவின் பேச்சு, கவிதை, உரையாடலை கேட்கவே பங்கேற்றேன். கவிப்பேரரசு வைரமுத்து என்பது பெயர் அல்ல. தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை, கௌரவம், தவப்புதவன் என சொல்லலாம். அவரிடம் இருந்து ஒரு சில விஷயங்களை நான் ஃபாலோ பண்ணுகிறேன். கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றுள்ள ஹீரோக்களுக்கென்று அறிமுக பாடல்கள் இருக்கும். அந்த பாடல்கள் எல்லா இடங்களிலும் ஒலிக்கும். ரஜினியின் வந்தேண்டா பால்காரன், ஆட்டோக்காரன் போன்ற பாடல்கள் மக்களிடத்தில் போய் சேரும். ட்யூனுக்கு வரிகளை நிரப்பாமல் மக்களுக்கு என்னென்ன…