ஸ்வாதி கொலை வழக்கு இயக்குநர் கிளப்பப் போகும் பரபரப்பு என்னவாக இருக்கும்?

ஸ்வாதி கொலை வழக்கு இயக்குநர் கிளப்பப் போகும் பரபரப்பு என்னவாக இருக்கும்?

தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய கொலைவழக்குகளில் ஸ்வாதி கொலை வழக்கு-கும் இடமுண்டு. அந்த வழக்கை மையமாகக் கொண்டு தயாரான ’நுங்கம்பாக்கம்’என்ற பெயரில் மாறி இருக்கும் படம் வரும் 24ம் தேதி அன்று ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகிறது. தமிழக தலைநகர் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்பட பல ரயில் நிலையங்களில் இன்று சிசிடிவி கேமிரா பொருத்தப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு காரணம் ஸ்வாதி கொலை வழக்குதான். ஸ்வாதி கொலை செய்யப்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா இல்லாததால்தான் இக்கொலையில் பல மர்மங்கள் நீடிக்கிறது. இந்த கொலை வழக்கிற்கு பின்னர்தான் நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் அந்த சுவாதியின் கொலையில் பல மர்மங்கள் புதைந்திருப்பதாக கூறப்படும் நிலையில், அப்பெண்ணை கொன்ற ராம்குமார் தற்கொலையிலும் பல மர்மங்கள் புதைந்திருப்பதாக புகார்கள் இருக்கின்றன. ராம்குமாரின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்து போராடி…
Read More