நடிகர் நிகில், இயக்குநர் கேரி BH மற்றும் ED Entertainment இணையும், பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் “ஸ்பை” !

நடிகர் நிகில், இயக்குநர் கேரி BH மற்றும் ED Entertainment இணையும், பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் “ஸ்பை” !

  திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா வின் 19வது திரைப்படத்தை “கோதாச்சரி, எவரு மற்றும் ஹிட் போன்ற பிரபலமான படங்களின் படத்தின் தொகுப்பாளர் கேரி BH இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தினை சரண் தேஜ் உப்பலாபதி மற்றும் ED entertainment சார்பில் K ராஜசேகர் ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். நிகிலின் கதாபாத்திரத்தின் அடிப்படையில், இந்தப் படத்திற்கு ‘ஸ்பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் தலைப்பே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்தப் படத்தின் டைட்டிலில் துப்பாக்கி, தோட்டா மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது, போஸ்டரில் கருப்பு நிற டீசர்ட் மற்றும் கருப்பு கார்கோ பேண்ட் அணிந்து, படு ஸ்மார்ட்டாக நிக்கில் கையில் ஷாட்-கன்னுடன் நடந்து வருவது ஸ்டைலாக உள்ளது, இந்த போஸ்டரில் நிகிலை பார்க்கும்போது ஒரு உண்மையான ஸ்பை போலவே தோற்றமளிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது.…
Read More