போர்க்கள பூமியில் 30 வருடங்களுக்கு பிறகு திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது!

போர்க்கள பூமியில் 30 வருடங்களுக்கு பிறகு திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு சினிமா அரங்குகள் திறக்கப்பட்டுள்ளது. புல்வாமா, சோபியான் ஆகிய இடங்களில் ஏற்கனவே சினிமா திரையரங்குகள் கடந்த வருடம் திறக்கப்பட்டன. கடந்த சில நாட்களுக்கு முன் பாரமுல்லாவில் திறக்கப்பட்டது. இந் நிலையில் பந்திபோரா, கதர்பால், குல்காம் மாவட்டங்களில் தலா ஒரு திரையரங்குகள் திறக்கப்படும் என ஜம்மு-மாநில துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்கா தெரிவித்துள்ளார். மேலும், ''பாகிஸ்தான் மற்றும் ஒரு சிலரின் சுற்றுச்சூழல் அமைப்பு பல வருடங்களாக ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளை அழிக்க முயற்சித்தனர். ஆனால் தற்போது ஜம்மு- காஷ்மீர் மக்கள் மற்றும் இளைஞர்கள் புதிய கனவுகளை கொண்டுள்ளனர். புதிய சூழ்நிலை உருவாக உதவி புரிந்து வருகிறார்கள் என்பதை என்னால் கூறமுடியும். அமைதியான இடத்தில்தான் கலை உருவாகும் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். எங்கு அமைதி இல்லையே, அங்கு கலை இல்லை. ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட சூழ்நிலையால் கலைஞர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது, ஜம்மு காஷ்மீரின் இழந்த…
Read More
திரைப்படங்களுக்கு ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என்பது போன்று சான்றிதழை வழங்கபட உள்ளது

திரைப்படங்களுக்கு ‘யூ/ஏ 7+, யூ/ஏ 13+, யூ/ஏ 16+ என்பது போன்று சான்றிதழை வழங்கபட உள்ளது

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் திருத்தப்பட்ட ஒளிப்பதிவு சட்ட முன்வரைவுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக ஒரு திரைப்படம் தியேட்டர் மூலமாக மக்களை சென்றடையும் முன் அதற்கு தணிக்கை குழு 'யு, யு/ஏ அல்லது ஏ' என்பது போன்று சான்றிதழை வழங்கும். இதில் யு சான்றிதழ் பெற்ற படங்களை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் பார்க்கலாம். அதேபோல் யு/ஏ சான்றிதழ் படங்களை 12 வயதுக்கு குறைவானவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்புடன் தான் பார்க்க முடியும். இறுதியாக ஏ சான்றிதழ் பெற்ற படங்களை 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்கப்படுவர். தற்போது மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட ஒளிப்பதிவு முன்வரைவு சட்டத்தின் மூலம் தணிக்கை குழு வழங்கும் மேற்கண்ட சான்றிதழ்களை வயது வாரியாக பிரித்து சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது. அதாவது 'யூ/ஏ 7+, யூ/ஏ 13+,…
Read More
error: Content is protected !!