கேள்வி கேட்டால் அரசு விரோதமா?  -இயக்குநர் அப்செட்!

கேள்வி கேட்டால் அரசு விரோதமா? -இயக்குநர் அப்செட்!

ஆச்சி கிழவி திரைக்கூடம் சார்பில் மா.திரவியபாண்டியன் தயாரிப்பில் சொழிந்தியம் வழங்கும் 'துப்பறிவு' 2020 இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது. இது தூய்மை இந்தியா இயக்கம் சார்ந்து உருவாகியிருக்கிறது. ஒரு திட்டம் வெற்றி பெற அரசு மட்டும் போதாது மக்கள் ஒத்துழைப்பும் தேவை என்று வலியுறுத்துகிறது இந்த ஆல்பம். இதன் வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தமிழ் ஆல்பத்தை வெளியிட்டார். தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தி ஆல்பத்தை வெளியிட்டார். விழாவில் கலைப்புலி எஸ்.தாணு பேசும் போது , " இது ஒரு குடும்ப விழாவாக உணர்கிறேன். இதை இயக்கியுள்ள தினேஷின் தந்தை திரவிய பாண்டியன் எது செய்தாலும் என்னிடம் கேட்டுத்தான் செய்வார். தன் மகன் இம் முயற்சியில் இறங்கிய போது வணிக அம்சங்களுக்கு இடம் தராமல் இனம் மொழி ,தேசம் என்று உயர்ந்த நோக்கத்துக்கு ஆதரவாக இருந்து ஊக்கப்படுத்தி இருக்கிறார். சினிமாவில் இந்த தம்பி…
Read More