06
Aug
இயக்குநர் - ஹனு ராகவாப்புடி நடிப்பு - துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா கதை - ராணுவத்தில் வேலை செய்யும் ஒருவன் ஒரு வீர தீர செயல் மூலம் பிரபலமாகிறான். அவன் அநாதை என்பது வானொலி மூலம் தெரியவர இந்தியா முழுவதிலிமிருந்து அவனுக்கு உறவுகள் என கடிதம் வருகிறது. அதில் ஒரு கடிதம் நான் உன் மனைவி என வருகிறது, அவன் அவளை தேடி போகிறான் அவளால் இவன் காதலை ஏற்க முடியவில்லை. அது ஏன்? அவர்களின் காதல் சேர்ந்ததா? என்பதே கதை. வெகு நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு அழகான நாவல் போன்றதொரு கதை. காட்சிகள் மனதில் ரம்மியமாய் ஒட்டிக்கொள்ள ஒரு நாவலின் அத்தியாங்கள் போல் கதை நகர்கிறது. கதை முழுதும் ராஷ்மிகா பாத்திரத்தின் பார்வையில் விசாரணையில் நமக்கு சொல்லப்படுகிறது. அதன் மூலமே பல முடிச்சுகள் அவிழ்கின்றன. மொத்த படமும் முடிந்து நிமிர்கின்ற பொழுது ஒரு…