12
Dec
மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் பாசி, சினேகா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள். படத்தில் வரும் ஸ்லம் ஏரியா அதாவது குடிசைப் பகுதி உண்மையானது அல்ல. அது படத்திற்காக போடப்பட்ட செட். 7.5 ஏக்கர் வெற்று நிலத்தை தேர்வு செய்து குடிசைப் பகுதி போன்று செட் போட்டுள்ளனர். இந்த செட்டை போட 55 நாட்கள் ஆகியுள்ளது. பார்த்தால் செட் என்று தெரியாத அளவுக்கு தத்ரூபமாக உள்ளது. தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா செலவை பார்க்காமல் இவ்வளவு பெரிய செட் போட அனுமதி அளித்தாராம். வேலைக்காரன் சிவகார்த்திகேயனுக்கு நிச்சயம் ஸ்பெஷலான படமாக இருக்கும் என்று மோகன் ராஜா தெரிவித்துள்ளார். இந்நிலையில்தான் ‘வேலைக்காரன்’ படத்தின் அரங்கு உருவாக்க வீடியோ டிசம்பர் 10 அன்று யூடியூப்பில் வெளியாகி பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரித்த போது, “சினிமாவில் கலை இயக்கம் என்பது மிக முக்கியமான துறை. திரைக்கதையில் கதை…