11
Mar
இயக்குநர் சி.வி.ஸ்ரீதருக்கும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் இடையில் அந்த காலத்தில் அப்படி ஒரு கெமிஸ்ட்டிரி.எதிர்பாராதது, அமரதீபம், உத்தமபுத்திரன், விடிவெள்ளி என்று பல திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து பட்டையைக் கிளப்பிக் கொண்டிருந்த நேரம்.அந்தப் படங்கள் ஒவ்வொன்றிலும் ஏதோ ஒருவகையில் ஸ்ரீதரின் கைவண்ணம் மிளிர்ந்தது. அமரதீபம், உத்தமபுத்திரன் போன்ற படங்களில் ஸ்ரீதரின் வீனஸ் நிறுவனத்தின் பங்களிப்பு இருந்தது. இந்தநிலையில் ஒரு விழாவில் இயக்குநர் ஸ்ரீதரும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மிகவும் வேண்டப்பட்ட ஒருவரும் தற்செயலாகச் சந்தித்துக் கொண்டார்கள். ‘என்னங்க, எப்பப் பார்த்தாலும் நடிகர் திலகத்துக்கு கூடவே ஒட்டி உறவாடுறீங்க? அவரை வச்சே படம் எடுக்கிறீங்க? ஏன் மக்கள் திலகத்தை வச்சு படம் எடுக்க மாட்டீங்களா?’ என்று கேட்டிருக்கிறார் அந்த வேண்டப்பட்டவர். ஸ்ரீதருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நடிகர் திலகத்தைப் பொறுத்தவரை அவர் இயக்குநர்களுக்கான நடிகர். இயக்குநர்கள் சொல்வதைக் கேட்டு நடிப்பார். சொந்த ஐடியாக்கள் எதுவும் இருந்தால் அதை இயக்குநரிடம் சொல்லி தனது நடிப்பை…