குட் நைட் திரைவிமர்சனம்

குட் நைட் திரைவிமர்சனம்

  இயக்குநர் : விநாயக் சந்திரசேகர் நடிப்பு : மணிகண்டன், மேகா ரகுநாத், ரமேஷ் திலக் இசை : சான் ரோல்டன் தயாரிப்பாளர் : மகேஷ் ராஜ் பெசிலியன் எப்போதாவது பூக்கும் குறிஞ்சிப்பூக்களில் ஒன்றாக மலர்ந்திருக்கிறது குட்நைட். ஒரு சிறு குறட்டை எத்தனை பிரச்சனையாகும். அதுதான் படமே !! ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மோகன் (மணிகண்டன்) ஐடியில் வேலை செய்து வருகிறான் அவன் தூங்கும் போது, தான் விடும் குறட்டை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் குறட்டையால் தன் குடும்பம், நண்பர்கள், அலுவலகம் போன்ற பல இடங்களில் அவமானப்படும் அவனை ஒரு கட்டத்தில் அதனை காரணம் காட்டி காதலியும் கைவிட்டு சென்று விடுகிறாள்.இப்படி விரக்தியின் உச்சத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மோகனின் வாழ்க்கையில் தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் அனு அறிமுகம் ஆகிறாள். அனுவிடம் கடைசி வரை தன்னுடைய குறட்டை பிரச்சினையை மறைத்து கல்யாணம் செய்து கொள்கிறான். இரவு வாழ்க்கையில் குறட்டை…
Read More