11
Mar
இயக்குநர்கள் - ஷியாம் மற்றும் ப்ரவீன் நடிகர்கள் - வெற்றி, பார்வதி அருண், ரமேஷ் திலக் கதை - மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளும் நாயகன் தனக்கு தெரிந்த ஒரு நபருக்கு நடந்த கதையாக ஒரு கொலை விசாரணையை கூறுகிறான். ஒருவனின் மெமரியை அறிவியல் மூலம் அழித்துவிட்டு தப்பிக்கும் கொலையாளியை பிடித்த கதையை கூறுகிறான் ஆனால் உண்மையான கதை வேறு மாதிரியாக இருக்கிறது. 8 தோட்டாக்கள், ஜீவி, என திரில்லர் படங்களில் அசத்தும் நாயகன் வெற்றி நடிப்பில் வெளிவந்துள்ள படம். “மெமரீஸ்” படமும் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் தான் உருவாகியுள்ளது. ஷ்யாம் மற்றும் பிரவீன் என்ற மலையாள இரட்டை இயக்குநர் இயக்கியுள்ளார். வெற்றியை நம்பி போனால் குழப்பம் தான் மிச்சமாகிறது. ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன்…