சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

சிவாஜி மணி மண்டப விழாவில் முதல்வர் கலந்துக்கணும்! – பிரபு வேண்டுகோள்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்க வேண்டும் என்பதே அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களின் விருப்பம் என்றும், இந்த விஷயத்தில் சாதகமான பதிலுக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என்றும் நடிகர் பிரபு கூறியுள்ளார். இது தொடர்பாக சிவாஜி குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் சார்பில் அவர் மாநில தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சருக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது வருமாறு:- அப்பாவின் (சிவாஜி) நினைவு மண்டபம் என்பது மறைந்த முதல மைச்சர் ஜெயலலிதாவின் மிகப் பெரிய கனவு திட்டமாகும். அவர் உயிரோடு இருந்திருந்தால் திறப்பு விழாவுக்கு தலைமை வகித்து  சகாப்தம் படைத்த எங்களது தந்தை நடிகர் திலகத்தின் ஆன்மாவுக்கு திருப்தி அளித்திருப்பார். நாங்களும் மகிழ்ச்சியடைந்திருப்போம். ஆனால் மிகப்பெரிய நடிகரின் நினைவு மண்டப திறப்பு விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பங்கேற்கவில்லை என்பதை அறிந்து நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். திரைப்படங்கள் மூலம் தமிழுக்கும் தமிழ் கலாச்சாரத்துக்கும் அவர் மிகப்…
Read More