26
Jan
இயக்கம் - விஷால் வெங்கட் நடிகர்கள் - நாசர், அசோக் செல்வன், மணிகண்டன், ரித்விகா, பிரவீன் சில நேரங்களில் சில மனிதர்கள் தமிழில் வந்திருக்கும் ஒரு அருமையான சினிமா அனுபவம். ஒரு விபத்து வாழ்வின் வெவ்வேறு முனைகளில் இருக்கும் நால்வரின் மனங்களிலும் குணங்களிலும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அதனை சுற்றி நடக்கும் சம்பவங்களும் தான் கதை. நால்வர் வாழ்க்கை ஒரு ஹைபர் லிங் கதை போல ஆரம்பித்து அந்த உணர்வுபூர்வமான பயணத்தில் நம்மையும் இழுத்து சென்று நமக்குள்ளும் சில மாற்றங்களை அழுத்தமாய் விதைத்திருக்கிறார்கள். அசோக் செல்வன் தாயை இழந்து தந்தையுடன் வாழும் நடுத்தர இளைஞன். கல்யாணம் வைத்துவிட்டு அதன் பரபரப்பில் இயங்கி கொண்டிருப்பவன், நல்லமனம் இருந்தாலும், எப்போதும் எல்லோரிடத்திலும் எரிந்து விழுந்துகொண்டிருப்பவன் தான் சொல்வதை கேட்க வேண்டும் என்று நினைப்பவன். மணிகண்டன் ஒரு ரிசார்ட்டில் ரூம் மேனேஜ்மெண்ட் க்ளீனிங் பொறுப்புகளை செய்து கொண்டிருக்கும் ஏழை இளைஞன், சொல்லும் வேலையை பொறுப்பில்லாமல் செய்து விட்டு,…