23
Jan
மலையாளத்தில் வெளிவந்த இப்படத்தை பற்றிய நண்பரின் விமர்சனம் படத்தைப் பார்க்கத் தூண்டியது. இந்திய பெரும்பான்மைப் பெண்களின் நிலையை எதார்த்தமாய் விளக்கியுள்ளது இப்படம். சாப்பிட்ட தட்டைக் கூட எடுக்காத, சாப்பிட்ட எச்சிலை மேசை மீது போடும் ஆண்கள் உள்ளவீட்டில் திருமணம் முடித்து செல்கிறாள் பெண்ணொருத்தி...! மூன்று நேரமும் சமைப்பதும், பாத்திரங்களை கழுவுவதுமாகவே செல்கிறது அவள் வாழ்க்கை. அவ்வாழ்க்கையை விடுத்து அவள் சுயத்திற்கானத் தேடலின் முடிவை நோக்கி நகர்கிறது கதை.. இப்படத்தில் வரும் அவளது வாழ்க்கை மட்டுமல்ல, நிறையப் பெண்களின், வேலைக்கு செல்லும் பெண்களின் வாழ்க்கை கூட இப்படித்தான் நகர்கிறது. ஒருநாளில், சமைய லுக்கென ஒருபெண் குறைந்தபட்சம் 5 மணி நேரம் செலவு செய்தால் கூட தன் வாழ் நாளில் மூன்றில் ஒரு பகுதியை சமையலறையில் கழிக்கவேண்டியதாய் இருக்கிறது. பெண்களின் ரத்தத்தை வியர்வையாய் உறிஞ்சுகிறது "தி கிரேட் இந்தியன் கிச்சன்"... சமைப்பது பெண்களின் வேலையா? ஆண்களின் வேலையா? என்றால் அது இருவரின் வேலையும் தான்.…