11
Apr
இந்திய கடைசியாக 1962 ஆசிய விளையாட்டு போட்டிகளில் கால்பந்தாட்டத்தில் கோப்பையை வென்றது. அதற்குப் பிறகு 64 வருடங்கள் ஆகிவிட்டது ஒரு கோப்பையைக் கூட இன்று வரை வெல்லவில்லை. எத்தனை கொடுமையான விசயம் ஆனால் இந்திய காலப்பந்தாட்டத்தின் பொற்காலமாக சொல்லப்படுகிற 1956 முதல் 1962 வரை, இந்திய கால்பந்தாட்ட கோச்சாக பணிபுரிந்து இந்தியாவை உலகமே திரும்பிப்பார்க்க வைத்த, ரஹீம் எனும் அற்புதமான வரலாற்றை பேசுவது தான் இந்த மைதான் திரைப்படம். ஏன் இந்தியா விளையாட்டு போட்டிகளில் இத்தனை பின் தங்கி இருக்கிறது. இந்தியா சுதந்திரம் வாங்கிய பிற்பாடு உலகளவில் நமக்கு மரியாதை வாங்கி தந்தது விளையாட்டுப் போட்டிகள் தான். கிரிக்கெட், கால்பந்து, ஓட்டம் நம் விளையாட்டு வீரர்கள் கிடைத்த வாய்ப்புகளில் தங்கள் திறமையை கொட்டினார்கள் ஆனால் அ உரியவர்களுக்கு உரித்தான வாய்ப்புகள் வழங்கப்பட்டதா ? இல்லையே அந்த சோக வரலாற்றையும் சேர்த்தே பதிவு செய்கிறது இந்தப்படம். ஏ ஆர் ரஹீம் தனக்கு கிடைத்த…