22
May
நடிகை சுனைனா கடத்தப்பட்டதா சினிமா பட தயாரிப்பு நிறுவனமொன்று வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் தகவல் பரவியதை அடுத்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மகாராஷ்டிரா மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் நடிகை சுனைனா. கடந்த 2008-ம் ஆண்டு `காதலில் விழுந்தேன்' என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாக நடிகை சுனைனா, மாசிலாமணி, வம்சம், சில்லுகருப்பட்டி மற்றும் லத்தி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது அயிரா புரொடக் ஷன்ஸ் தயாரிப்பில், டொமின் டிசில்வா இயக்கத்தில் ரெஜினா என்ற திரைப்படத்தில் நடித்து வந்தார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய 4 மொழிகளில் விரைவில் வெளியாக உள்ளது. இந்தநிலையில் நடிகை சுனைனாவை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்ற தகவல் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவிச்சு. மேலும் அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவர் கடத்தப்பட்டாரா? என்ற கேள்வியுடன் வீடியோ ஒன்றும் வைரலானது . கடந்த 6 நாட்களுக்கு…